உ.பி.,யில் பஸ் மீது லாரி மோதி விபத்து; 5 பேர் பலி
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த பஸ் மீது லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் எட்டா மாவட்டத்தில் அதிவேகமாக வந்த லாரி ஒன்று சாலையோரம் நின்றுகொண்டிருந்த அரசு பஸ் மீது மோதியதில் ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயமடைந்தனர் என போலீசார் தெரிவித்தனர். நேற்று இரவு 11.30 மணியளவில் அரசு பஸ்சில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது.
பழுது பார்ப்புக்காக சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த பஸ்சிலும், பல பயணிகள் கீழே இறங்கி அருகில் நின்றுகொண்டிருந்தபோது, அதிவேகமாக வந்த லாரி மோதியது. இந்த விபத்து நள்ளிரவு நிகழ்ந்துள்ளது. இரவு பயணங்களால் அடுத்தடுத்து விபத்து நடக்கிறது. நள்ளிரவு நேரம், அதிகாலையில் வாகன பயணத்தை தவிர்ப்பது நல்லது.
வாகனம் ஓட்டுபவர், தூக்க கலக்கத்தில் சற்று அசந்தாலும் பெரும் விபத்து நடை பெறும். இந்த விபத்து இரவு 8 மணிக்கு மேல் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
மேலும்
-
சொல்கிறார்கள் ––––––––––– ‘உழைப்பும் மன உறுதியும் இருந்தால் ஜெயிக்கலாம்!’
-
முதல்வருக்கு எதிராக அவதுாறு; மாஜி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது
-
மேற்கு வங்கத்தில் சட்டவிரோதமாக ஊடுருவிய வங்கதேசத்தைச் சேர்ந்த 9 பேர் கைது
-
அமர்நாத் யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு பிரதமர் மோடி 5 அன்பு கட்டளை!
-
விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை; சரக்கு கப்பல்களுக்கு ஈரான் திடீர் மிரட்டல்
-
லஞ்ச ஒழிப்பு போலீஸ் சம்மன்; விசாரணைக்கு வராத திமுக மாஜி எ.வ.வேலு