எமனேஸ்வரம் மார்க்கெட் தெருவில் ஓடும் கழிவுநீர்: வியாபாரிகள், மக்கள் அவதி
பரமக்குடி: பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் மார்க்கெட் தெருவில் சாக்கடை நீர் ஓடுவதால் தொற்று நோய் பீதியில் வியாபாரிகள், மக்கள் உள்ளனர்.
பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் பகுதியில் 10 வார்டுகள் இருக்கிறது. இங்கு காலை 7:00 மணி துவங்கி மதியம் வரை காய்கறி மார்க்கெட் செயல்படுகிறது. இந்த தெருவில் ஏராளமான குடியிருப்புகள், திருமண மஹால்கள், கடைகள் இருக்கின்றன. ஒவ்வொரு முறை ரோடு போடும் போதும் வாறுகால் உயர்த்தி கட்டாமல் உள்ளனர்.
இதனால் தெருமுனை சந்திப்புகளில் கல்வெட்டு பாலங்கள் தாழ்ந்த நிலையிலேயே இருக்கிறது. இதன் வழியாக கழிவுநீர் கடந்து செல்ல முடியாமல், குப்பை தேங்கி நாள் முழுவதும் தெருக்களிலேயே கழிவுநீர் செல்கிறது. இதனால் பள்ளி மாணவர்கள், முதியவர்கள் உட்பட கடை வீதிக்கு செல்வோர் அனைவரும் தொற்று பீதியில் பயணிக்கின்றனர்.
இது குறித்து நகராட்சி உள்ளிட்ட அலுவலர்களிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுப்பதில் மெத்தனமாக உள்ளனர் என மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே ஒட்டுமொத்தமாக வாறுகால்களை துார்வாரி சுத்தம் செய்தால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும். தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் வாறுகால்களை சுத்தம் செய்ய நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
--
மேலும்
-
சொல்கிறார்கள் ––––––––––– ‘உழைப்பும் மன உறுதியும் இருந்தால் ஜெயிக்கலாம்!’
-
முதல்வருக்கு எதிராக அவதுாறு; மாஜி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது
-
மேற்கு வங்கத்தில் சட்டவிரோதமாக ஊடுருவிய வங்கதேசத்தைச் சேர்ந்த 9 பேர் கைது
-
அமர்நாத் யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு பிரதமர் மோடி 5 அன்பு கட்டளை!
-
விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை; சரக்கு கப்பல்களுக்கு ஈரான் திடீர் மிரட்டல்
-
லஞ்ச ஒழிப்பு போலீஸ் சம்மன்; விசாரணைக்கு வராத திமுக மாஜி எ.வ.வேலு