விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை; சரக்கு கப்பல்களுக்கு ஈரான் திடீர் மிரட்டல்
டெஹ்ரான்:'ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் அனைத்து சரக்கு கப்பல்களும் அனுமதித்த வழித்தடங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும்,' என்று ஈரான் எச்சரித்துள்ளது.
அமெக்கா - ஈரான் இடையே கடந்த பிப்ரவரி 28ம் தேதி துவங்கிய போர், தற்போது தற்காலிக போர் நிறுத்தம் அமலில் இருந்து வருகிறது. இதனால், நீண்ட நாட்களுக்குப் பிறகு, எந்தவித பாதுகாப்பு அச்சமும் இன்றி, சரக்குக் கப்பல்கள் முக்கிய நீர்வழிப்பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து வருகின்றன.
இந்த சூழலில், வாக்குறுதியை மீறிவிட்டதாக இருதரப்பினர் மீண்டும் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், ஹார்முஸ் ஜலசந்தியில் மீண்டும் கட்டுப்பாடுகளை ஈரான் கடைபிடித்து வருகிறது.
இந்த நிலையில், அமெரிக்காவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து வரும் வேளையில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் அனைத்து எண்ணெய் கப்பல்களும் ஈரான் அனுமதித்த வழித்தடங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், தவறினால் கடும் நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் ஈரானின் கூட்டு ராணுவக் கட்டளைப் பிரிவு எச்சரித்துள்ளது. இது சர்வதேச அளவில் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
மேலும்
-
192 மணி நேர கான்கிரீட் சிறை... மரணத்தை வென்று மீண்ட மனிதன்:
-
திருப்பரங்குன்றம் மலை அளவீடு; ஐகோர்ட் கிளை அவகாசம்
-
சொத்து பிரச்னையில் அண்ணனை தாக்கிய வழக்கு புதுச்சேரி கோர்ட்டில் ஆஜராக தமிழக அமைச்சருக்கு உத்தரவு
-
பழங்குடியின பெண்களுக்கு தொழிற்பயிற்சி துவக்கம்
-
சொத்து பிரச்னையில் அண்ணனை தாக்கிய வழக்கு புதுச்சேரி கோர்ட்டில் ஆஜராக தமிழக அமைச்சருக்கு உத்தரவு
-
கீழத்தாழனுார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கூட்டுறவு விழா