லஞ்ச ஒழிப்பு போலீஸ் சம்மன்; விசாரணைக்கு வராத திமுக மாஜி எ.வ.வேலு

31

சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் எ.வ வேலு, உடல்நிலையை காரணம் காட்டி இன்று(ஜூலை 03) லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

கடந்த, தி.மு.க., ஆட்சியில் பொதுப்பணிகள், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராக இருந்தவர் வேலு. தற்போது திருவண்ணாமலை தொகுதி எம்.எல்.ஏ.,வாக உள்ளார். இவர் அமைச்சராக இருந்த போது, கரூரில் சாலையே போடாத சங்கரானந்த் என்ற நிறுவனத்திற்கு, 3.23 கோடி ரூபாய் வழங்கப்பட்டதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து, லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், வேலு, நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்கள் ஒன்பது பேர் மற்றும் சங்கரானந்த் நிறுவனத்தின் நிர்வாகி சங்கர் ஆனந்த் என, 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடந்த, 26ம் தேதி, வேலுவின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள் உட்பட, 40 இடங்களில் சோதனை நடத்தி, 40 லட்சம் ரூபாய் மற்றும் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர். இவ்வழக்கு தொடர்பாக, விசாரணைக்கு இன்று நேரில் ஆஜராக வேண்டும் என வேலுவுக்கு சம்மன் அனுப்பி இருந்தனர்.

இந்நிலையில் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் எ.வ.வேலு லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜராகவில்லை. திங்கட்கிழமை அல்லது வேறு ஒரு நாளில் ஆஜராக அவரது வழக்கறிஞர் தரப்பில் நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



@block_G@

சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதி

திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சைக்காக சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். மேலும் 10 நாட்கள் சிகிச்சை எடுத்துக் கொள்ள டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர் என லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சம்மன் அனுப்பி இருந்த நிலையில், எ.வ.வேலு தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.block_G

Advertisement