மேற்கு வங்கத்தில் சட்டவிரோதமாக ஊடுருவிய வங்கதேசத்தைச் சேர்ந்த 9 பேர் கைது

கொல்கட்டா: மேற்கு வங்கம் மாநிலம் முர்ஷிதாபாத் ரயில் நிலையத்தில் சட்டவிரோதமாக ஊடுருவிய வங்கதேசத்தைச் சேர்ந்த 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேற்கு வங்கத்தில் பாஜ ஆட்சியமைந்த பிறகு, அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறியவர் மீது முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையிலான அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

அந்த வகையில், முர்ஷிதாபாத் ரயில் நிலையத்தில் சட்டவிரோதமாக ஊடுருவிய வங்கதேசத்தைச் சேர்ந்த 9 பேரை போலீசார் கைது செய்தனர். ரயில்நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் சுற்றித் திரிவதாக வந்த தகவலின் பேரில், பகவான்கோலா போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட நபர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வேலை செய்து வந்ததாகவும், ரகசியமாக மீண்டும் சொந்த நாட்டிற்கே தப்பிச் செல்லத் திட்டமிட்டிருந்ததும் தெரியவந்துள்ளது.

Advertisement