மேகதாது அணை திட்டத்தை தடுத்து நிறுத்த அனைத்து கட்சிகளையும் திரட்ட வேண்டும்; அன்புமணி பேட்டி
சேலம்: கர்நாடக அரசு, காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, பா.ம.க., தலைவர் அன்புமணி, ஒகேனக்கல் முதல் பூம்புகார் வரை விழிப்புணர்வு நடைபயண பிரசாரம் நடத்தி வருகிறார். இரண்டாம் நாளான இன்று, சேலத்தில் அவர் அளித்த பேட்டி:
கர்நாடகா அரசு, ஏராளமான ஒப்பந்தங்கள், தீர்மானங்கள், உச்சநீதிமன்ற தீர்ப்பு என அனைத்தையும் மீறி, மேகதாது அணை கட்டியே ஆக வேண்டும் என பிடிவாதமாக உள்ளது. பெங்களூரு குடிநீர் தேவைக்கு 5 டி.எம்.சி., போதுமானது. ஆனால், 70 டி.எம்.சி., தண்ணீர் தேக்கும் அளவுக்கு அணை எதற்கு?
கர்நாடகாவில், 1974ல் காவிரி நீர் பாசனம் மூலம் 6.7 லட்சம் ஏக்கராக இருந்த விவசாய பரப்பளவை, 2021ல் 21 லட்சம் ஏக்கராக உயர்த்தியுள்ளனர். மேகதாது அணை கட்டப்பட்டால், இது 30 லட்சம் ஏக்கராக உயரும்.
தமிழகத்தில், 1974ல் 29 லட்சம் ஏக்கராக இருந்த காவிரி நீர் பாசன விவசாய பரப்பளவு, 2026ல் 20 லட்சம் ஏக்கராக குறைந்துள்ளது. மேகதாதுவில் அணை கட்டினால், தமிழகத்துக்கு வாழ்வாதாரம், பொருளாதாரம், உணவு என எதுவும் கிடைக்காமல் போகும். பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன், தமிழகத்தில் அனைத்து கட்சியினரையும் அழைத்து மேகதாது திட்டத்தை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
@block_Y@
தொடர்ந்து மேட்டூரில் அன்புமணி பேசுகையில், 'கர்நாடகாவை தேசிய கட்சிகளே ஆள்வதால், மேகதாது விவகாரத்தில் தேசிய கட்சிகள் கவலைப்படாது.
சமூகவலைதள பயன்பாட்டால் ஒருவர், தற்போது முதல்வராகியுள்ளார்.
எனவே, மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழக மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை சமூக ஊடகங்கள் வாயிலாக, இளைஞர்கள் மத்தியில் பரப்ப வேண்டும். எதிர்கால தலைமுறை பாதிக்கப்படாமல் இருக்க, இத்தகவலை லைக் செய்யுங்கள், சப்க்ஸ்ரைப் செய்யுங்கள், ஷேர் செய்யுங்கள்' என்றார்.block_Y
மேலும்
-
192 மணி நேர கான்கிரீட் சிறை... மரணத்தை வென்று மீண்ட மனிதன்:
-
திருப்பரங்குன்றம் மலை அளவீடு; ஐகோர்ட் கிளை அவகாசம்
-
சொத்து பிரச்னையில் அண்ணனை தாக்கிய வழக்கு புதுச்சேரி கோர்ட்டில் ஆஜராக தமிழக அமைச்சருக்கு உத்தரவு
-
பழங்குடியின பெண்களுக்கு தொழிற்பயிற்சி துவக்கம்
-
சொத்து பிரச்னையில் அண்ணனை தாக்கிய வழக்கு புதுச்சேரி கோர்ட்டில் ஆஜராக தமிழக அமைச்சருக்கு உத்தரவு
-
கீழத்தாழனுார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கூட்டுறவு விழா