ஒரே ஒரு மின் திருட்டு கண்டுபிடிப்பு ஸ்மார்ட் மீட்டர் இல்லாத வரை ஜாலி

கோவை: டான்ஜெட்கோவின் அமலாக்க பிரிவு அதிகாரிகள், பெரியநாயக்கன்பாளையத்தில் நடத்திய சோதனையில், ஒருவர் திருட்டு தனமாக மின்சாரம் பயன்படுத்தி வந்ததை கண்டு பிடித்தனர்.

திருடிய மின்சாரத்துக்கு இழப்பீடு தொகையாக 5.5 லட்சம் கட்டுமாறு உத்தரவிட்டனர். அவர் உடனே மின்சாரம் திருடியதை ஒப்புக் கொண்டு, கட்டணத்தையும் செலுத்தி விட்டு, சமரச தொகை என்ற பெயரில் 10 ஆயிரம் ரூபாயும் செலுத்தியதால், அவர் மீது போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கவில்லை என, அதிகாரிகள் தெரிவித்தனர். அவரை பற்றிய விவரம் சொல்ல மறுத்து விட்டனர்.

”தமிழகம் முழுவதும் தினமும் 100 கோடி ரூபாய்க்கு மேல் மின்சார திருட்டு நடக்கிறது. அதிகாரிகளுக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பே இல்லை. ஒரே அட்டாக்கில் மின் திருட்டுக்கும் மின் துறையின் நஷ்டத்துக்கும் விஜய் அரசு முடிவு கட்ட முடியும். ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் செய்து பொருத்த போவதாக தி.மு.க ஆட்சியிலும், அதற்கு முன்பு அ.தி.மு.க ஆட்சியிலும் நடந்த நாடகத்தை நிறுத்தினாலே போதும்” என்று ஓய்வு பெற்ற முதுநிலை அலுவலர் ஒருவர் குறிப்பிட்டார்.

Advertisement