டிப்ளமா படிப்பில் 56 சதவீத இடம் காலி
சென்னை: தமிழகத்தில் டிப்ளமா படிப்புகளில், 44 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பி உள்ளன; 56 சதவீத இடங்கள் காலியாக உள்ளன.
தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் கீழ், 54 பாலிடெக்னிக் கல்லுாரிகள் இயங்கி வருகின்றன. இதில், 22,000 டிப்ளமா படிப்பு இடங்கள் உள்ளன.
ஒவ்வொரு ஆண்டும், டிப்ளமா படிப்பின் மீதான ஆர்வம், மாணவ -- மாணவியர் மத்தியில் குறைந்து வருகிறது.
ந டப்பாண்டு, அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில் உள்ள, 22,000 இடங்களில், வெறும், 10,000 இடங்கள் மட்டுமே நிரம்பி உள்ளன. அதாவது, மொத்த இடங்களில், 44 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன.
மீதமுள்ள 56 சதவீத இடங்கள், அதாவது 12,000 இடங்கள் காலியாக உள்ளன.
இதுகுறித்து, உயர் கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:
நடப்பாண்டு, சிவில் படிப்பில் சேர்க்கை மிகவும் குறைந்துள்ளது. அனைத்து பாடங்களிலும் சேர்க்கையை அதிகரிக்க, தொழில்நுட்ப கல்வி இயக்ககம் முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு, ஓராண்டு தொழில் முறை பயிற்சி நேரடியாக தொழிற்சாலைகளில் வழங்கப்படுகிறது. அதற்காக மாதந்தோறும், 23,000 ரூபாய் ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது.
மேலும், 100 சதவீதம் வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படுகின்றன. ஆனால், இன்ஜினியரிங், கலை அறிவியல் படிப்பின் மீதான ஆர்வத்தால், மாணவர்கள் டிப்ளமா படிப்பை தேர்வு செய்ய தயங்குகின்றனர். இதில், ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன என்பதை, மாணவர்கள் உணர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
-
காட்டெருமை தாக்கியதில் நேபாள தொழிலாளி காயம்
-
கஞ்சா வைத்திருந்த இருவர் கைது
-
பிச்சாவரம் படகு குழாமில் பிரியாணி விற்பனை துவக்கம்
-
கத்தார் பிரதமருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு; மேற்காசிய போர் குறித்து முக்கிய ஆலோசனை
-
ஒடிஷாவில் எஸ்ஐஆர் பணிகள் நிறைவு; 20 லட்சம் பேர் நீக்கம்