உணவுப்பொருட்கள் ஏற்றுமதி குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி
செங்கல்பட்டு, ஜூலை 4–
செங்கல்பட்டில், வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுமதி குறித்து விவசாயிகளுக்கு நேற்று, பயிற்சி அளிக்கப்பட்டது.
செங்கல்பட்டு கலெக்டர் கூட்டரங்கில், மத்திய அரசின் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் மற்றும் வணிகத்துறை சார்பில் திறன் மேம்பாடு விழிப்புணர்வு பயிற்சி நேற்று நடந்தது. இந்த பயிற்சி முகாமை கலெக்டர் வீரப்பன் தொடங்கி வைத்தார்.
வேளாண் துறை அதிகாரிகள் கூறியதாவது:
இந்த பயிற்சி முகாமில், செங்கல்பட்டு மாவட்டம் அருகாமையில், விமான நிலையம், துறைமுகங்கள் அமைந்துள்ளன. இதனால், வேளாண் ஏற்றுமதிக்கு, நிலக்கடலை, தேங்காய், மாம்பழங்கள், தர்ப்பூசணி, காய்கறிகள் மற்றும் மரச்செக்கு முறையில் தயாரிக்கப்படும் சமையல் எண்ணெய்கள், இயற்கை மற்றும் இயற்கை வேளாண் விளைபொருட்கள் ஆகியவற்றில் ஏற்றுமதிக்கான மிகுந்த வாய்ப்புகள் உள்ளன. அடுத்த 10 ஆண்டுகளில், வேளாண் ஏற்றுமதி இந்தியாவின் கிராமப்புற பொருளாதார வளர்ச்சிக்கான முக்கிய இயக்க சக்தியாக இருக்கும்.
உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில் முனைவோர் உலகளாவிய மதிப்பு சங்கிலியில் இணைவதற்கு வழிவகை செய்யப்படும். ஏற்றுமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனங்களுடன் சந்தை இணைப்புகள் உருவாக்கப்படும். விவசாயிகளின் வருமான உயர்விற்கு உறுதுணையாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்நிகழ்வில், மகளிர் தொழில் முனைவோர், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.
மேலும்
-
லஞ்ச ஒழிப்பு ரெய்டில் சுவாரஸ்யம்; குப்பைத் தொட்டியில் பதுக்க முயன்ற பணம் பறிமுதல்
-
வணிகவரி சுழற்சிப்படையில் பெண் அலுவலர்கள் அவதி; இணை கமிஷனர்கள் நடவடிக்கை எடுப்பரா
-
சங்கங்கள் கருத்து கேட்டு அரசு காப்பீட்டு திட்டத்தை மறுமதிப்பீடு செய்ய வேண்டும்: ஓய்வூதியர்கள் போர்க்கொடி
-
'தமிழகத்தில் ரூ.22 ஆயிரம் கோடி சுற்றுலா முதலீடுகள் என்னாச்சு'
-
ஹிந்து முன்னணி செயலர் நுால் பட்டறைக்கு தீ வைப்பு
-
ஒரே நாளில் 22 ரவுடிகள் கைது