ஒப்பந்தம் விடாத ‘ஸ்கேட்டிங்’ மைதானத்திற்கு கட்டணம் வசூலித்து ரூ.பல லட்சம் கொள்ளை தனியார் செயலுக்கு குடியிருப்போர் நலச்சங்கம் எதிர்ப்பு
செம்பாக்கம்: தாம்பரம் மாநகராட்சியின் ‘ஸ்கேட்டிங்’ மைதானத்திற்கு, தனியார் ஒருவர் கட்டணம் வசூலித்து, பல லட்சம் ரூபாய் கொள்ளை அடித்து வருவதாக, புகார் எழுந்துள்ளது.
தாம்பரம் மாநகராட்சி, செம்பாக்கம் அன்னை அஞ்சுகம் பூங்காவில், 52.50 லட்சம் ரூபாய் செலவில், ஸ்கேட்டிங், பூப்பந்து மைதானம், சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டு, பிப்., 12ல் திறக்கப்பட்டது.
காலை, மாலை நேரத்தில் நுாற்றுக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். இங்குள்ள ஸ்கேட்டிங் மற்றும் பூப்பந்து மைதானங்களை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
ஆனால், ‘ஸ்கேட்டிங்’ மைதானத்தை தனியார் ஒருவர், உள்ளூர் அரசியல்வாதி மற்றும் அதிகாரிகளின் துணையுடன் ஆக்கிரமித்து, இருவருக்கு மேல்வாடகை விட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அவர்கள், மூன்று நாட்கள் வீதம், ஒருவருக்கு மாதம், 1,500 ரூபாய் என, கட்டணம் வசூலித்து பயிற்சி அளித்து வருகின்றனர். ஒப்பந்தம் விடாத நிலையில், மாதந்தோறும் பல லட்சம் ரூபாய் கொள்ளை அடிப்பதாக, பகுதிமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
செம்பாக்கத்தைச் சேர்ந்த பகுதிவாசி வி.சீதாராமன், 71, என்பவர் கூறியதாவது:
ஸ்கேட்டிங் மைதானத்தை, கடந்த ஆட்சியில் தனியாருக்கு ‘டெண்டர்’ விட திட்டமிடப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், ஒப்பந்தம் விடுவது நிறுத்தப்பட்டது.
அப்படியிருந்தும், ஸ்கேட்டிங் மைதானத்தை தனியார் ஒருவர் கையகப்படுத்தி, ஒருவருக்கு 1,500 ரூபாய் என, கட்டணம் நிர்ணயித்து, மாதந்தோறும் பல லட்சம் ரூபாய் கொள்ளை அடித்து வருகிறார். இதற்கு, மாநகராட்சி அதிகாரிகள் தான் முழு காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கூறுகையில், ‘‘அன்னை அஞ்சுகம் பூங்காவை பராமரிப்புக்க மட்டுமே ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. ஆய்வு செய்து, தனியார் கட்டுப்பாட்டில் இருக்கும் ஸ்கேட்டிங் மைதானத்தை கையகப்படுத்தி, மக்கள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.
மேலும்
-
லஞ்ச ஒழிப்பு ரெய்டில் சுவாரஸ்யம்; குப்பைத் தொட்டியில் பதுக்க முயன்ற பணம் பறிமுதல்
-
வணிகவரி சுழற்சிப்படையில் பெண் அலுவலர்கள் அவதி; இணை கமிஷனர்கள் நடவடிக்கை எடுப்பரா
-
சங்கங்கள் கருத்து கேட்டு அரசு காப்பீட்டு திட்டத்தை மறுமதிப்பீடு செய்ய வேண்டும்: ஓய்வூதியர்கள் போர்க்கொடி
-
'தமிழகத்தில் ரூ.22 ஆயிரம் கோடி சுற்றுலா முதலீடுகள் என்னாச்சு'
-
ஹிந்து முன்னணி செயலர் நுால் பட்டறைக்கு தீ வைப்பு
-
ஒரே நாளில் 22 ரவுடிகள் கைது