93 சதவீத பணியிடங்கள் காலி தள்ளாடுகிறது 'காதி கிராப்ட்'
சென்னை: கதர் துறையின் கீழ் செயல்படும் 'காதி கிராப்ட்'டில், 93 சதவீத பணியிடங்கள் காலியாக இருப்பதால், காதி கிராப்ட் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
காந்தியின் கிராம சுயராஜ்ய கொள்கையின்படி, கிராமப்புற நெசவாளர்கள், கைவினைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, கதர் துறையில் காதி கிராப்ட் பிரிவு தொடங்கப்பட்டது.
அதன் கீழ், 24 நுால் நுாற்பு, 14 நெசவு, ஐந்து பட்டு நுால் மையங்கள் இயங்குகின்றன. இவை, போதிய பணியாளர்கள் இல்லாமல் தடுமாறி வருகின்றன.
இது குறித்து, துறை பணியாளர்கள் கூறியதாவது:
காதி கிராப்ட் லாபத்தில் இயங்க, 1,950 பணியாளர்கள் இருக்க வேண்டும். இப்போது 130 பேர் மட்டுமே உள்ளனர். இப்பிரிவில், 93 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், பணிச்சுமை பல மடங்கு அதிகரித்துள்ளது.
மேலும், தனியார், இணையதள போட்டிக்கு இணையாக, அரசின் காதி தயாரிப்புகளை கொண்டு சேர்க்க முடியாமல், விற்பனை நிலையங்கள் நஷ்டத்தை சந்திக்கும் சூழல் உருவாகி உள்ளது.
எனவே, பாரம்பரியமிக்க காதி கிராப்ட் பிரிவை காப்பாற்ற, அரசு தேவையான ஊழியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
@block_B@ ரூ.50 லட்சம் வரை கடன் பெறலாம் மத்திய அரசின் பி.எம்.இ.ஜி.பி., எனும் பிரதமர் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் வாயிலாக ஹோட்டல் தொடங்க, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க, பால் பண்ணை, பால் பொருட்கள், கதர் பொருட்கள் தயாரிப்பு, கோழி பண்ணை, மீன் வளர்ப்பு, விற்பனை நிலையம் அமைக்க கடன் வழங்கப்படுகிறது. உற்பத்தி பிரிவுக்கு 50 லட்சம் ரூபாய் வரை, சேவை பிரிவுக்கு 20 லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம். நகர்ப்புறத்தினருக்கு 15; கிராமப்புறத்தினருக்கு 25 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. பட்டியலினத்தோர், இதர பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத் திறனாளிகளுக்கு, நகர்ப்புறத்தினருக்கு 25 சதவீதம்; கிராமப்புறத்தினருக்கு 35 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. இவர்கள், கதர் மற்றும் கிராம தொழில்கள் ஆணையத்தை அணுகலாம் அல்லது www.kviconline.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.block_B
மேலும்
-
அடுத்த வாரம் நியூசிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி
-
மின்சார வாகன பயன்பாடு உச்சம்; ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி சேமிக்க முடியும்!
-
சர்வதேச விமான டிக்கெட் கட்டணம் குறைகிறது; பயணிகள் நிம்மதி
-
மயிலாடுதுறையில் அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதல்
-
வெனிசுலாவில் அதிசயம்; நிலநடுக்க இடிபாடுகளுக்குள் சிக்கியவர் 8 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்பு
-
டாக்டர் போல் தோற்றத்தில் ஏஐ வீடியோ; பிரபலங்களை கேலி செய்த அதிபர் டிரம்ப்