'லோக் பவன்' தலைமையில் வைகை நதி மீட்டெடுப்பு கவர்னர் அர்லேக்கர் உறுதி
மதுரை: ''வைகை நதியை மீட்கும் பொறுப்பை இளைஞர்கள் கையில் எடுக்க வேண்டும். யாரும் முன்னெடுக்கவில்லை எனில், லோக் பவன் தலைமை தாங்கி முன்னின்று நடத்தும்,'' என, மதுரையில் நடந்த விழாவில் தமிழக கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் பேசினார்.
மதுரை சவுராஷ்டிரா கல்லுாரியில் தென்னிந்திய ஆய்வு மையம் சார்பில், 'ஐ.என்.ஏ., வேர்களைத் தேடி' என்ற தலைப்பில் நடத்தப்பட்ட கட்டுரை, குறும்பட போட்டிகளில் வென்றவர்களுக்கான பரிசு வழங்கும் விழா நடந்தது.
போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி கவர்னர் அர்லேக்கர் பேசியதாவது:
விடுதலை போரில் தமிழர்கள் முன்னணியில் நின்று களம் கண்டவர்கள். நாட்டின் ஓர் அங்கமாகவே தமிழகம் எப்போதும் தன்னை கருதி வந்து உள்ளது.
மதுரை வைகை நதி தண்ணீரின்றி வறண்டு உள்ளது. வைகையில் மீண்டும் தண்ணீர் ஓடச் செய்தால், நதிக்கரையில் மீண்டும் ஒரு நாகரிகம் தழைத்தோங்கும்.
எனவே, வைகையை மீட்கும் பொறுப்பை இளை ஞர்கள் கையில் எடுக்க வேண்டும். யாரும் முன்னெடுக்கவில்லை எனில், 'லோக் பவன்' தலைமை தாங்கி முன்னின்று நடத்தும்.
சமுதாயத்தில் உள்ள இது போன்ற குறைகள், தீமைகளை எதிர்த்துப் போராட, இளைஞர்களை சரியான பாதையில் வழிநடத்த வேண்டும். அதுவே தேசபக்தி.
இவ்வாறு பேசினார்.
விழாவில், கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரர் மீனாட்சிசுந்தரம் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.
இதற்கிடையே, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'வைகையை அரசு சீரமைக்காவிட்டால், கவர்னர் மாளிகை களம் இறங்கும் என, கவர்னர் பேசி உள்ளார். கவர்னரின் இந்த அசட்டு துணிச்சலுக்கு, ஆளுங்கட்சியின் கையாலா காத்தனமே காரணம்.
'மாற்றம் என்ற பெயரில் ஆட்சிக்கு வந்தவர்கள், மாநில உரிமைகளை தாரை வார்க்காமல், கவர்னர் ஆய்வு செய்யும் நடைமுறையை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.
மேலும்
-
மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
-
காட்டெருமை தாக்கியதில் நேபாள தொழிலாளி காயம்
-
கஞ்சா வைத்திருந்த இருவர் கைது
-
பிச்சாவரம் படகு குழாமில் பிரியாணி விற்பனை துவக்கம்
-
கத்தார் பிரதமருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு; மேற்காசிய போர் குறித்து முக்கிய ஆலோசனை
-
ஒடிஷாவில் எஸ்ஐஆர் பணிகள் நிறைவு; 20 லட்சம் பேர் நீக்கம்