ஒடிஷாவில் எஸ்ஐஆர் பணிகள் நிறைவு; 20 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கம்

2

புவனேஸ்வர்: ஒடிஷாவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் 20 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர்.

இதன்மூலம் தற்போதுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை3.13 கோடியாக குறைந்துள்ளது. இதில் ஆண்களின் எண்ணிக்கை 1.60 கோடி, பெண்களின் எண்ணிக்கை 1.53 கோடி. மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2775.

பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 20 லட்சம். அதில் 8.32 லட்சம் பேர் உயிருடன் இல்லை 10.07 லட்சம் பேர் வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தவர்கள். 1.58 லட்சம் பேர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்காளர்களாக பதிவு செய்தவர்கள் ஆவர்.

Advertisement