செங்கல்பட்டு அரசு கல்லுாரியில் கூடுதல் பாடப்பிரிவுகள் தொடங்க எதிர்பார்ப்பு
செங்கல்பட்டு: செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கல்லுாரியில், கூடுதலாக புதிய பாடப்பிரிவுகள் தொடங்க வேண்டும் என மாணவ - மாணவியர் எதிர்பார்க்கின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் தலைநகரில், ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலை கல்லுாரி, கடந்த 1970ம் ஆண்டு, தொடங்கப்பட்டது.
இங்கு, பி.ஏ., தமிழ், ஆங்கிலம், அறிவியல், பி.எஸ்.சி., கணிதம், பி.காம்., பி.எஸ்.சி., வேதியியல் உள்ளிட்ட, 12 இளங்கலை பாடப்பிரிவுகள் உள்ளன.
எம்.ஏ., தமிழ், ஆங்கிலம், இலக்கியம், வரலாறு, எம்.காம்., வணிகவியல் உள்ளிட்ட ஏழு முதுகலை பாடப்பிரிவுகளும், தமிழ், ஆங்கிலம், கணிதம் வரலாறு, வணிகவியல், வேதியியல் ஆகிய ஆராய்ச்சி படிப்புகள் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது.
இந்த கல்லுாரியில் முதலாமாண்டில் 990 மாணவர்கள் சேர்க்கை அனுமதிக்கப்பட்டுள்ளது; கூடுதலாக 20 சதவீம் சேர்த்து, 1,188 மாணவர்கள், ஆண்டுதோறும் சேர்க்கை நடக்கிறது.
செங்கல்பட்டு நகரை சுற்றி, 30 கி.மீ., தொலைவில் உள்ள கிராமப்புற மாணவ - மாணவியர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் என, 10,000த்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பிக்கின்றனர்.
ஆனால், 1,000 மாணவர்கள் மட்டுமே இங்கு பயில்வதற்கான தகுதியை பெறுகின்றனர். இங்கு, இடம் கிடைக்காத கிராமப்புற மாணவர்கள் தனியார் கல்லுாரிகளை நோக்கி படையெடுக்கின்றனர்.
இதனால், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவ - மாணவியர் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இக்கல்லுாரியில், தற்போது 4,000த்திற்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் இடநெருக்கடியுடன் பயின்று வருகின்றனர். கூடுதல் வகுப்பறை கோரி கல்லுாரி நிர்வாகம் கருத்துரு அனுப்பியும் இதுவரை அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
இதுகுறித்து கல்லுாரி முதல்வர் சண்முகவள்ளி கூறியதாவது:
கிராமப்புற மாணவர்கள் நலன் கருதி, பி.எஸ்.சி., இயற்பியல், எம்.எஸ்.சி., இயற்பியல், எம்.எஸ்.சி., விலங்கியல், எம்.ஏ., அரசியல் அறிவியல், பி.காம்., பி.ஏ., தமிழ், பி.எஸ்.சி., கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகள், 2026 - 27ம் ஆண்டில் தொடங்க வேலுார் மண்டல கல்லுாரி, கல்வி இணை இயக்குநருக்கு, கடந்த ஆண்டு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டது.
அதே போல், 20 கூடுதல் வகுப்பறைகள், கலையரங்கம் ஆகியவை கட்டித்தர கோரியுள்ளோம். எனவே, கிராமப்புற மாணவர்கள் நலன் கருதி, புதிய பாடப்பிரிவுகள் தொடங்க, முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
பார்லி மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20 முதல் ஆக., 13 வரை; முக்கிய மசோதாக்கள் கொண்டு வர மத்திய அரசு திட்டம்
-
300 சொகுசு ஹோட்டல்களில் தங்கி மோசடி: தமிழகத்தை சேர்ந்தவர் ஒடிஷாவில் கைது
-
உணவுப்பொருட்கள் ஏற்றுமதி குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி
-
ஒப்பந்தம் விடாத ‘ஸ்கேட்டிங்’ மைதானத்திற்கு கட்டணம் வசூலித்து ரூ.பல லட்சம் கொள்ளை தனியார் செயலுக்கு குடியிருப்போர் நலச்சங்கம் எதிர்ப்பு
-
தடுப்பு இல்லாத பரந்துார் சாலையில் விபத்து அபாயம்
-
குழாய் சீரமைப்பு பணி அரைகுறை காஞ்சியில் வீணாகும் குடிநீர்