ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.1200, வெள்ளி கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் அதிகரிப்பு
சென்னை: சென்னையில் இன்று (ஜூலை 03) ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1200 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 600 ரூபாய்க்கும், கிராமுக்கு 150 ரூபாய் அதிகரித்து 13,700 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச நிலவரங்களால் தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (ஜூலை 01) ஆபரண தங்கம் கிராம், 13,250 ரூபாய்க்கும், சவரன், 1,06,000 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 245 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்றைய நிலவரம்
நேற்று (ஜூலை 02) காலை, தங்கம் விலை கிராமுக்கு, 150 ரூபாய் உயர்ந்து, 13,400 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 1,200 ரூபாய் அதிகரித்து, 1,07,200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு ஐந்து ரூபாய் உயர்ந்து, 250 ரூபாய்க்கு விற்பனையானது.
மாலையில் மீண்டும் தங்கம் விலை கிராமுக்கு, 150 ரூபாய் அதிகரித்து, 13,550 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 1,200 ரூபாய் உயர்ந்து, 1,08,400 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு ஐந்து ரூபாய் உயர்ந்து, 255 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு, 2,400 ரூபாயும், வெள்ளி கிலோவுக்கு, 10,000 ரூபாயும் அதிகரித்தது.
இன்றைய நிலவரம்
இந்நிலையில் இன்று (ஜூலை 03) ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1200 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 600 ரூபாய்க்கும், கிராமுக்கு 150 ரூபாய் அதிகரித்து 13,700 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 3,600 ரூபாய் அதிகரித்துள்ளது.
வெள்ளியும் அதிகரிப்பு
வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து 260 ரூபாய்க்கும், கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் அதிகரித்து 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்
காலையிலேயே பார்த்தவுடன் தங்கம் விலை உயர்வு தான் கண்ணுக்கு வந்து விட்டதுமேலும்
-
அதிமுகவில் இருந்து மேலும் ஒரு நிர்வாகி விலகல்; வைகைச் செல்வன் ராஜினாமா
-
கோவில்களில் முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை: புகார் அளிக்க அமைச்சர் ரமேஷ் அழைப்பு
-
2026, தமிழ் சினிமா அரையாண்டு ரிப்போர்ட் : 118க்கு 6 படங்கள் மட்டுமே லாபம்!
-
பாகிஸ்தானின் எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்திற்கு கண்டனம்; இந்தியா - ஜப்பான் கூட்டறிக்கை
-
சொல்கிறார்கள் ––––––––––– ‘உழைப்பும் மன உறுதியும் இருந்தால் ஜெயிக்கலாம்!’
-
முதல்வருக்கு எதிராக அவதுாறு; மாஜி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது