கலிஞ்சிக்குப்பத்தில் வயல் விழா நிகழ்ச்சி

கண்டமங்கலம் ஜூலை 4-–: கண்டமங்கலம் அடுத்த கலிஞ்சிக்குப்பம் கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டம் சார்பில் வயல் விழா நிகழ்ச்சி நடந்து.

வேளாண்மை அலுவலர் விஜய் முன்னிலை வகித்தார். துணை வேளாண் அலுவலர்  செந்தமிழ்ச்செல்வன் வரவேற்றார். திண்டிவனம் வேளாண் அறிவியல் பயிர் பாதுகாப்பு நிலைய இணை பேராசிரியர் செந்தமிழ் ஒருங்கிணைந்த பூச்சி நோய் மற்றும் நுாற்புழு மேலாண்மை குறித்து பயிற்சி அளித்தார்.

மேலும், மிளகாய், மரவள்ளியில் தோன்றும் இலைபேன் மற்றும் பயிர் சிலந்தி மேலாண்மை,  மல்லிகை மற்றும் சாமந்தியில் தோன்றும் வாடல் நோய் மேலாண்மை குறித்தும் விவசாயிகளின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தார்.

கால்நடை மருத்துவர் ஜெயபிரகாஷ் கால்நடை வளர்ப்பு முறைகள் மற்றும் பராமரிப்பு நோய் மேலாண்மை துறை சார்ந்த திட்டங்கள் பற்றி விளக்கினார். உதவி வேளாண்மை அலுவலர் கோபி வேளாண் திட்டப் பணிகள் குறித்து பேசினார்.

வட்டார தொழில் நுட்ப மேலாளர் தேன்மொழி ஆத்மா திட்டம் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கினார்.

உதவி தொழில் நுட்ப மேலாளர் வீரமணி நன்றி கூறினார்.

ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் அருள்பாபு செய்திருந்தார்.

Advertisement