ஸ்ரீ ஷீவ் வித்யா மந்திர் பள்ளி மாணவ தலைவர்கள் தேர்வு
திருப்பூர்: திருப்பூர், பி.என்.ரோடு, அண்ணா நகரில் செயல்படும் ஸ்ரீ ஷீவ் வித்யா மந்திர் பள்ளியில், மாணவர் மன்ற தலைமை பதவிக்கான புதிய மாணவ, மாணவியர் தேர்வு நடந்தது.நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைவர் சென்னியப்பன் தலைமை வகித்தார். பொருளாளர் சிவகாமி, முன்னிலை வகித்தார். பள்ளி இயக்குனர் பூர்வவர்ஷினி, புதிதாக பதவியேற்ற மாணவ, மாணவியருக்கு வாழ்த்துக் கூறி, அவர்களின் கடமை, பொறுப்புகள் குறித்து விளக்கினார். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ தலைவர்களுக்கு பொறுப்பு பட்டைகள், சின்னங்கள் வழங்கப்பட்டு, அவர்கள் பள்ளிக்கும், மாணவர்களுக்கும் நேர்மையாக சேவையாற்றுவதாக உறுதியேற்றனர். பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement