நூறு நாள் வேலை உறுதி திட்டம்: பெயர் மாற்றத்துடன் அமல்

கம்பம்:மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் வி.பி.ஜி.ராம் ( விக்சித் பாரத் ஜி ராம் ஜி ) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு ஊராட்சிகளில் பணி துவங்கியது.

கிராமங்களில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், ஏழை தொழிலாளர்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், வாழ்வாதாரத்தை உறுதி செய்ய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இத் திட்டத்தின் கீழ் ஊராட்சிகளில் வசிப்பவர்களுக்கு 100 நாள் வேலை வழங்கப்பட்டது. தற்போது திட்டத்தின் பெயரை வி.பி.ஜி.ராம். ஜி என்று மாற்றம் செய்து, 100 நாள் என்பதை 125 நாட்களாக உயர்த்தி மத்திய அரசு அனுமதித்துள்ளது. ஊராட்சிகளில் தற்போது இந்த புதிய திட்டத்தின் கீழ் வேலைகள் நடைபெற்று வருகிறது.

தினசரி சம்பளமாக ரூ.336 வழங்கப்படும் என்றும் 15 நாட்களுக்கு ஒரு முறை பயனாளியின் வங்கி கணக்கில் சம்பளம் வரவாகும் என கூறப்பட்டுள்ளது. அறுவடை, நடவு உள்ளிட்ட வேளாண் சீசனில், 125 நாள் திட்டத்தால் தொழிலாளர்கள் தட்டுப்பாட்டை தவிர்க்க கலெக்டர்கள் நிலைமையை ஆய்வு செய்து விடுமுறை அறிவிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வேளாண் பணிகள் பாதிக்கப்படாமல் நடைபெற இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Advertisement