நுரையீரல் நோயறிதலில் நவீன தொழில்நுட்பம்

கோவை: ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் இன்டர்வென்ஷனல் நுரையீரல் மருத்துவ துறை மற்றும் கோவை ரெஸ்பிரேட்டரி சொசைட்டி இணைந்து தொராசிக் அல்ட்ராசவுண்ட் மற்றும் பேசிக் எக்கோ கருத்தரங்கத்தை நடத்தின.

கருத்தரங்கை மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரி ரகுபதி வேலுசாமி துவங்கி வைத்தார். ரெஸ்பிரேட்டரி சொசைட்டியின் செயலாளர் கீர்த்திவாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்றனர்.

நுரையீரல் மருத்துவம், தீவிர சிகிச்சை மற்றும் அவசர சிகிச்சையில் பயன்படுத்தப்படும் நவீன அல்ட்ராசவுண்ட் தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கப்பட்டதுடன், மேனிகின்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் செய்முறை பயிற்சியும் அளிக்கப்பட்டது.

'நவீன நோயறிதல் முறைகளில், நுரையீரல் அல்ட்ராசவுண்ட் ஒவ்வொரு நுரையீரல் மருத்துவருக்கும் இன்றியமையாத திறனாக மாறி வருகிறது,' என நுரையீரல் மருத்துவ துறை தலைவர் சுந்தரகுமார் தெரிவித்தார்.

Advertisement