பாலித்தீன் பயன்பாடு அரசுக்கு கோரிக்கை

மதுரை: மக்காத தன்மையுடைய பாலித்தீனை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என சுற்றுச்சூழல் அமைச்சர் ராஜிவிற்கு தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத்தினர் வலியுறுத்துகின்றனர்.

அவர்கள் கூறியதாவது: பாலித்தீன் பைகளின் பயன்பாட்டை தடுக்க மத்திய அரசு மைக்ரான் அளவை உயர்த்தி கொண்டே வருகிறது. பன்னாட்டு நிறுவனங்கள், பெரிய நிறுவனங்கள் பிளாஸ்டிக் பைகளில் ‘பேக்கிங்’ செய்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அதே நேரத்தில் சிறிய பலசரக்கு கடைக்காரர்கள் அரசு அனுமதித்துள்ள மைக்ரான் அளவு பைகளை பயன்படுத்தும் போது பறிமுதல் செய்யப்படுகிறது. இதை தவிர்க்க வேண்டும்.

அனைத்து மாவட்டங்களிலும் அரசு தடை செய்துள்ள குறைந்த மைக்ரான் பாலித்தீன் பைகள் விற்பனைக்கு வருகின்றன. வெளிமாநில, உள்நாட்டு தயாரிப்பாளர்கள் இவற்றை சந்தைப்படுத்துகின்றனர். கடைகளில் வைத்துள்ள குறைந்த மைக்ரான் பாலித்தீன் பைகளை பிடித்து அபராம் விதிப்பதற்கு பதிலாக தயாரிப்பு நிறுவனங்களை கண்டுபிடித்து அவர்களின் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும். பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்து தாருடன் கலந்து சாலை அமைக்கும் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்றனர்.

Advertisement