டிராக்டர் நிறுத்திய தகராறு 7 பேர் மீது வழக்குப் பதிவு
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே நிலத்தில் டிராக்டர் நிறுத்திய தகராறில் 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விக்கிரவாண்டி அடுத்த வெங்கந்துாரைச் சேர்ந்தவர் பற்குணன், 58; விவசாயி. இவர் தனது நிலத்தின் அருகே உள்ள ஏரி புறம்போக்கு நிலத்தை அனுபவித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை 3:00 மணிக்கு அதே ஊரைச் சேர்ந்த சகாதேவன் மகன் காளிதாஸ், 52; அந்த புறம் போக்கு நிலத்தில் அவரது டிராக்டரை நிறுத்தியுள்ளார்.
தனது அனுபவத்திலுள்ள நிலத்தில் டிராக்டரை நிறுத்தாதே என பற்குணன் கூறியதால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.
இதுகுறித்து இரு தரப்பு புகாரின் பேரில் காளிதாஸ், பற்குணன் உட்பட 7 பேர் மீது கெடார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
192 மணி நேர கான்கிரீட் சிறை... மரணத்தை வென்று மீண்ட மனிதன்:
-
திருப்பரங்குன்றம் மலை அளவீடு; ஐகோர்ட் கிளை அவகாசம்
-
சொத்து பிரச்னையில் அண்ணனை தாக்கிய வழக்கு புதுச்சேரி கோர்ட்டில் ஆஜராக தமிழக அமைச்சருக்கு உத்தரவு
-
பழங்குடியின பெண்களுக்கு தொழிற்பயிற்சி துவக்கம்
-
சொத்து பிரச்னையில் அண்ணனை தாக்கிய வழக்கு புதுச்சேரி கோர்ட்டில் ஆஜராக தமிழக அமைச்சருக்கு உத்தரவு
-
கீழத்தாழனுார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கூட்டுறவு விழா
Advertisement
Advertisement