பல்லாங்குழி சர்வீஸ் ரோடால் பரிதவிக்கும் வாகன ஓட்டிகள்
திண்டுக்கல், ஜூன் 4
திண்டுக்கல் – மதுரை பைபாஸ் ரோடு பெரியபள்ளபட்டி அருகே பல்லாங்குழி சர்வீஸ் ரோடால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவது தொடர்கிறது.
பழநியில் இருந்து திண்டுக்கல் பைபாஸ் ரோட்டில் வரும் அரசு பஸ்கள் உட்பட அனைத்து வாகனங்களும் பழநி பைபாஸ் ரோடு சந்திப்பில் இருந்து வலதுபுறமாக திரும்பி சர்வீஸ் ரோட்டில் மதுரைக்கு செல்கின்றன.
இந்த ரோட்டில் பெரியபள்ளபட்டி அருகே வாகனங்களின் வேகத்தை குறைக்கும் வகையில் பல்லாங்குழி பள்ளங்கள் தோன்றி உள்ளன. அவ்வப்போது மழைநீர் தேங்குவதால் கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் பள்ளங்களில் சிக்கி விபத்துக்குள்ளாவது தொடர்கிறது. டூவீலரில் செல்பவர்களில் நாள்தோறும் 5 முதல் 10 பேர் விபத்தில் சிக்குகின்றனர்.
விபத்து நடந்து உயிரிழப்பு ஏற்படுவதை தவிர்க்க உடனடியாக ரோட்டில் உள்ள பள்ளங்களை சீரமைத்து போக்குவரத்தை பாதுகாப்பானதாக மாற்ற துறை அதிகாரிகள் முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
192 மணி நேர கான்கிரீட் சிறை... மரணத்தை வென்று மீண்ட மனிதன்:
-
திருப்பரங்குன்றம் மலை அளவீடு; ஐகோர்ட் கிளை அவகாசம்
-
சொத்து பிரச்னையில் அண்ணனை தாக்கிய வழக்கு புதுச்சேரி கோர்ட்டில் ஆஜராக தமிழக அமைச்சருக்கு உத்தரவு
-
பழங்குடியின பெண்களுக்கு தொழிற்பயிற்சி துவக்கம்
-
சொத்து பிரச்னையில் அண்ணனை தாக்கிய வழக்கு புதுச்சேரி கோர்ட்டில் ஆஜராக தமிழக அமைச்சருக்கு உத்தரவு
-
கீழத்தாழனுார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கூட்டுறவு விழா