அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டடத்தின் சுவர் இடிந்து விழுந்து சேதம்
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டடம் கட்டும் பணி நடந்து வந்த நிலையில் கட்டடத்தின் சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்தது.
முதுகுளத்துார் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு முதுகுளத்துார் தாலுகாவிற்கு உட்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையிலிருந்து மேல் சிகிச்சைக்காக முதுகுளத்துார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இங்கு கூடுதல் கட்டடம் வசதி இல்லாமல் நோயாளிகள் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து கடந்த சில மாதத்திற்கு முன்பு ரூ.5.50 கோடியில் புதிதாக கூடுதல் கட்டடம் கட்டும் பணி நடந்தது.
இந்நிலையில் நேற்று காலை திடீரென புதிதாக கட்டப்பட்ட கட்டடத்தின் சுவரின் ஒரு பகுதி இடிந்து சேதமடைந்தது. அப்போது அவ்வழியே யாரும் செல்லாததால் சேதம் தவிர்க்கப்பட்டது. இதனால் அருகில் இருந்து பார்த்தவர்கள் அச்சமடைந்தனர். பின் பணியாளர்கள் இடிந்து விழுந்த சுவற்றின் பகுதியை உடனடியாக அப்புறப்படுத்தினர்.
புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தின் சுவர் இடிந்து விழும் அவல நிலையில் உள்ளது. எனவே அதிகாரிகள் அவ்வப்போது கட்டடம் முறையாக கட்டப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். இடிந்து விழுந்தது குறித்து அதிகாரிகள் முழுமையாக ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட பணியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
–––
மேலும்
-
192 மணி நேர கான்கிரீட் சிறை... மரணத்தை வென்று மீண்ட மனிதன்:
-
திருப்பரங்குன்றம் மலை அளவீடு; ஐகோர்ட் கிளை அவகாசம்
-
சொத்து பிரச்னையில் அண்ணனை தாக்கிய வழக்கு புதுச்சேரி கோர்ட்டில் ஆஜராக தமிழக அமைச்சருக்கு உத்தரவு
-
பழங்குடியின பெண்களுக்கு தொழிற்பயிற்சி துவக்கம்
-
சொத்து பிரச்னையில் அண்ணனை தாக்கிய வழக்கு புதுச்சேரி கோர்ட்டில் ஆஜராக தமிழக அமைச்சருக்கு உத்தரவு
-
கீழத்தாழனுார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கூட்டுறவு விழா