பயன்பாடில்லாத சுகாதார வளாகம்

திருப்புவனம், ஜூலை 4-

திருப்புவனத்தில் சுகாதாரத்தை பேணும் வகையில் வைகை ஆற்றங்கரையோரம் 16 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட சுகாதார வளாகம் பராமரிப்பின்றி இருப்பதால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

புண்ணியம் தரும் ஸ்தலம் என திருப்புவனம் போற்றப்படுகிறது. மறைந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் வழங்க ஏராளமான ஹிந்துக்கள் திருப்புவனம் வந்து செல்கின்றனர். வருகிறவர்கள் இயற்கை உபாதைக்காக வைகை ஆற்றை பயன்படுத்தி வந்தனர். திறந்த வெளியை பயன்படுத்துவதை தடுக்க திதி பொட்டல் அருகே 2012- 13ம் ஆண்டு 16 லட்ச ரூபாய் செலவில் சுகாதார வளாகம் கட்டப்பட்டது.

சுகாதார வளாகத்தை பேரூராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால் சேதமடைந்து துர்நாற்றம் வீசுகிறது. வைகை ஆற்றை ஒட்டியுள்ள பகுதி என்பதால் நிலத்தடி நீருக்கு எந்த பிரச்னையும் இல்லை. குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாகிறது. வளாகத்தில் 13 வருடங்களாக பராமரிப்பு பணியே செய்யவில்லை. இதனால் பயன்படுத்த முடியாத அளவிற்கு உள்ளது மீண்டும் பக்தர்கள் இயற்கை உபாதைக்காக வைகை ஆற்றை பயன்படுத்தி மாசுபடுத்தி வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் சுகாதார வளாகத்தை பராமரிப்பு செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

Advertisement