சேலத்தில் இன்று முதல்முறையாக 'பெஸ்டிவ் எடிட்' சேலை கண்காட்சி
சேலம்; பெண்களின் ரசனைக்கேற்ப, பாரம்பரிய நெசவு கலைகள், நவீன பேஷன் நுணுக்கங்களை ஒன்றி-ணைத்து, 'பெஸ்டிவ் எடிட்' பெயரில், அனிகா சார்பில், பிரமாண்ட சேலை கண்காட்சி விற்-பனை, சேலத்தில் இன்று முதல்முறையாக நடக்-கிறது.
இதில் இடம்பெற்றுள்ள சேலைகள், வெறும் ஆடைகள் மட்டுமல்ல; அவை, இந்தியா வின் பல்வேறு மாநிலங்களின் கலை சங்கமம். நம் ஜவுளி பாரம்பரியத்தை பிரதிபலிக்கும்படி, பல்-வேறு மாநிலங்களின் நெசவு முறைகளை தேர்ந்-தெடுத்து, பெண்களின் ரசனைக்கேற்ப புதுமை-யாக வடிவமைக்கப்பட்ட சேலைகளே, இக்கண்-காட்சியின், 'ஹைலைட்'. ஒவ்வொரு சேலையும் தனித்துவமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக காஞ்சிபுரம் பாந்தினி, கோடைக்கேற்ற இலகுவான கைத்தறி டஸ்ஸார், கலம்காரி புட-வைகள், டிஜிட்டல் மற்றும் பிளாக் பிரின்டிங் காஞ்சி பட்டு, மெல்லிய தரம் கொண்ட ஆர்கன்சா புடவை கள், வடமாநிலங்களில் புகழ் பெற்ற பனாரஸ் புடவைகள் என பெண்களை கவரும்படி, ஏராளமான வெரைட்டிகள்
உள்ளன. குறிப்பாக குஜராத்தின் புகழ்பெற்ற பாந்-தினி கலை, தமிழகத்தின் அடையாளமான காஞ்-சிபுரம் பட்டுடன் இணைக்கப்பட்டு, புதிய பியூஷன் வடிவில் பிரீமியம் ரகங்களாக மாற்றப்பட்டுள்-ளன.
பிளாக் பிரின்டிங் மற்றும் நுணுக்கமான கைவே-லைப்
பாடுகள் கொண்ட காஞ்சிபுரம் சேலைகள் இங்கு அணிவகுக்கின்றன. திருமணம், நிச்சயதார்த்தம் உள்ளிட்ட விசேஷங்களுக்கு ஏற்ற சேலைகளை ஒரே இடத்தில் தேர்ந்தெடுக்க, இது ஒரு சிறந்த வாய்ப்பு.
இளைய தலைமுறை
இளைய தலைமுறையினர் விரும்பும்படி, முதல்-முறையாக உயர்தர, 'அன்ஸ்டிச்டு' சல்வார் சூட்ஸ் ரகங்களும், இக்கண்காட்சியில் இடம்
பெறுகின்றன. பிரீமியம்
தோற்றத்தை விரும்பும் பெண்களுக்கு இதுவே சரியான சாய்ஸ்.
எங்கே? எப்போது?
சேலம், ஏ.வி.ஆர்., ரவுண்டானா அருகே உள்ள சி.ஜெ.பளாசியோ ஹோட்டலில், இன்று காலை, 9:00 முதல் இரவு, 9:00 மணி வரை, இக்கண்காட்சி நடக்கிறது. மக்கள், பிடித்தமான ஆடைகளை தேர்வு செய்து வாங்கலாம்.
மேலும்
-
மண்ணின் சுமை தாங்கும் திறன் அறிவதற்கான வழிமுறைகள்!
-
ஆன்லைன் முறையில் பட்டா பதிவிறக்கம் செய்வது எப்படி?
-
சட்டப்பூர்வ ஆய்வு இல்லாமல் சொத்து வாங்குவது நல்லதல்ல!
-
பாட்டி கொடுத்த சொத்தில் பேத்தியின் கணவர் உரிமை கோர முடியாது!
-
எந்த இடத்தில் என்ன வகை சிமென்டை பயன்படுத்த வேண்டும்?
-
நெடுஞ்சாலையை ஒட்டிய மனையை வாங்குவதால் என்ன பிரச்னை?