வடமாநிலத்தவரிடம் பணம் பறித்த மேலும் 3 பேர் கைது
குமாரபாளையம்:மேற்குவங்கத்தை
சேர்ந்த, 7 பேர் வேலை தேடி நாமக்கல்லுக்கு வந்தனர். அவர்களிடம்,
கடந்த, 18ல், ஏழு பேர் கொண்ட கும்பல் ஏமாற்றி, 75,000 ரூபாயை
பறித்துக்கொண்டனர்.
இதுகுறித்து புகார்படி, குமாரபாளையம்
போலீசார் விசாரணை நடத்தினர். இதில், தேவனாங்குறிச்சியை சேர்ந்த
சுரேஷ், 32, ராஜதுரை, 29, திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த கோபிநாத்,
19, தங்கமணி, 32, ராஜ்குமார், 33, மற்றும் மூவர் ஈடுபட்டது
தெரியவந்தது.
இதில் ஏற்கனவே ஐந்து பேரை கைது செய்த நிலையில்,
நேற்று தேவனாங்குறிச்சியை சேர்ந்த சோமசுந்தரம், 35, திருச்செங்கோடு
அருகே மோர்பாளையம் பகுதியை சேர்ந்த அஜீத், 32, செங்கோடம்பாளையம்
பகுதியை சேர்ந்த சந்திரமோகன், 50, ஆகிய மூவரை கைது செய்து, நீதிபதி
முன் ஆஜர்படுத்தி, சேலம் சிறையில் அடைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
லஞ்ச ஒழிப்பு ரெய்டில் சுவாரஸ்யம்; குப்பைத் தொட்டியில் பதுக்க முயன்ற பணம் பறிமுதல்
-
வணிகவரி சுழற்சிப்படையில் பெண் அலுவலர்கள் அவதி; இணை கமிஷனர்கள் நடவடிக்கை எடுப்பரா
-
சங்கங்கள் கருத்து கேட்டு அரசு காப்பீட்டு திட்டத்தை மறுமதிப்பீடு செய்ய வேண்டும்: ஓய்வூதியர்கள் போர்க்கொடி
-
'தமிழகத்தில் ரூ.22 ஆயிரம் கோடி சுற்றுலா முதலீடுகள் என்னாச்சு'
-
ஹிந்து முன்னணி செயலர் நுால் பட்டறைக்கு தீ வைப்பு
-
ஒரே நாளில் 22 ரவுடிகள் கைது
Advertisement
Advertisement