முதுகுளத்துார், ஆர்.எஸ்.மங்கலம்வட்டாரத்தில் சிறப்பு பட்டா முகாம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் பொது மக்களின் பட்டா தொடர்பான கோரிக்கைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் நோக்கில் அனைத்து வட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற வுள்ளது.
இதன்படி முதற்கட்டமாக முதுகுளத்துார் வட்டத்தில் ஜூலை 7, 8ம் தேதிகளில் பட்டா மாறுதல், பட்டா மேல் முறையீடு மற்றும் கணினி திருத்தம் ஆகிய பட்டா தொடர்பான சேவைகளுக்கான சிறப்பு முகாம் முதுகுளத்துார் தாலுகா அலுவலகத்தில் பரமக்குடி ஆர்.டி.ஓ., சரவண பெருமாள் தலைமையில் நடைபெற உள்ளது.
ஆர்.எஸ்.மங்கலம் தாசில்தார் அலுவலகத்தில் ஜூலை 9, 10 ல் ராமநாதபுரம் ஆர்.டி.ஓ., ஹபிபுர் ரஹ்மான் தலைமையில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் தங்களது பட்டா தொடர்பான கோரிக்கைகளை உரிய ஆவணங்களுடன் மனு செய்து உடனடியாக பயன்பெறலாம் என கலெக்டர் சிவகுருபிரபாகரன் தெரிவித்துள்ளார்.––––––––
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வெள்ளகோவிலில் 7வது ஆண்டு புத்தக திருவிழா துவங்கியது
-
கோர்ட்டில் நிற்க முடியவில்லை வக்கீல்களுக்கு இருக்கை தேவை ஐகோர்ட் நீதிபதியிடம் மனு
-
பந்தலுாரில் தெருநாய்களால் பாதிக்கப்படும் மக்கள்
-
சுரங்கப்பாதையில் வாகனம் சிக்கியதால் பரங்கிமலையில் போக்குவரத்து நெரிசல்
-
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் நிலையம் துவக்கம்
-
பட விளக்கம்
Advertisement
Advertisement