வெள்ளகோவிலில் 7வது ஆண்டு புத்தக திருவிழா துவங்கியது 

வெள்ளகோவில், ஜூலை 4– 

மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை சார்பில் 7-வது  ஆண்டு, புத்தக திருவிழா  நேற்று துவங்கியது. வரும்  7ம் தேதி  வரை கண்காட்சி  நடைபெறுகிறது.



வெள்ளகோவில், ஆர்.பி.எஸ், மஹாலில், காங்கயம் எம்.எல்.ஏ. நடராஜன் துவக்கி வைத்தார்.  சுவாமி பீட்ஸ் முத்துசாமி புத்தக விற்பனையைத் துவக்கி வைத்தார். அறக்கட்டளை நிர்வாகிகள் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். புத்தக கண்காட்சி வரும், 7ம் தேதி வரை நடைபெறும். தினமும் காலை, 10:00 முதல் இரவு 9:00 மணி வரை நடைபெறும். கண்காட்சியில், ஆயிரக்கணக்கான தலைப்புகளில், பல்லாயிரம் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. 

தினமும் மாலை 6:30 மணிக்கு சிறப்பு சொற்பொழிவுகள் மற்றும் சிந்தனை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதில் பல்வேறு தலைப்புகளில் சிறப்ப பேச்சாளர்கள் பேசுகின்றனர். புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கில் நடைபெறும் இந்த ஐந்து நாள் புத்தகத் திருவிழாவில் மாணவர்கள், இளைஞர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்க மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை அழைப்பு விடுத்துள்ளது.

Advertisement