புத்தாக்க பயிற்சி
திட்டக்குடி, ஜூலை 4–
திட்டக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் இளநிலை முதலாமாண்டு மாணவர்களுக்கு, புத்தாக்க பயிற்சி முகாம் நேற்று துவங்கியது.
இந்த நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் மணிகண்டன் தலைமை தாங்கினார். அனைத்து துறை பேராசிரியர்கள்
பங்கேற்று, வேலை வாய்ப்பு, கல்லுாரியில் உள்ள துறைகள், சாலை பாதுகாப்பு, காடு வளர்ப்பு, தனி மனித ஒழுக்கம், போதை ஒழிப்பு ஆகியன குறித்து முதலாமாண்டு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர்.
இதில், அனைத்து துறை தலைவர்கள், கல்லுாரி பேராசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள், முதலாமாண்டு மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
இந்த முகாம் வரும், 8ம் தேதி வரை நடக்கிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement