ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நுகர்வோர் பாதுகாப்பு கூட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் கோட்ட அளவிலான பொது விநியோக திட்ட நுகர்வோர் பாதுகாப்பு கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு ஆர்.டி.ஓ., முருகன் தலைமை தாங்கினார். தாசில்தார் சிலம்பரசன் உள்ளிட்ட குடிமைப்பொருள் தாசில்தார்கள், நுகர்வோர் அமைப்பு நிர்வாகிகள் அருண்கென்னடி, சுப்ரமணியன், மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், வெளி மார்க்கெட்டை விட கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் கூடுதல் விலைக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. ஒட்டல்கள் மற்றும் டீ கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகிறது. கள்ளக்குறிச்சி நகர பகுதி சாலை ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையில் செடிகள் நடப்படுகிறது.

ஆறு மற்றும் ஏரி வாய்க்கால்களில் குப்பை மற்றும் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது, ஆறுகளில் கழிவுநீர் கலப்பதால் நீர் மாசுபடுகிறது, கழிவு நீர் சுத்தகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் உட்பட கோரிக்கைகள் மற்றும் புகார்கள் கூறப்பட்டது. புகார் மற்றும் கோரிக்கைகள் மீது பரிசீலினை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர்.டி.ஓ., முருகன் தெரிவித்தார்.

Advertisement