மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் மருத்துவ முகாம் நடந்தது.

கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நடந்த மருத்துவ முகாமிற்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் அந்தோணிராஜ் தலைமை தாங்கினார். அரசு எலும்பு முறிவு மருத்துவர் பாலசுப்ரமணியன், காது, மூக்கு, தொண்டை மருத்துவர் குதாஅலிபக் ஷ், மன நல மருத்துவர் ஜெயந்தி, கண் மருத்துவர் கோமதி ஆகியோர் முகாமிற்கு வந்தவர்களை பரிசோதனை செய்தனர். இதில், 40 சதவீதத்திற்கும் அதிகமாக உடல் உறுப்பு பாதிப்புடைய 38 பேருக்கு மருத்துவச்சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்க தகுதியுடைவராக தேர்வு செய்யப்பட்டது.

Advertisement