மகன்கள் மாயம் தந்தை புகார்

போடி. ஜூலை 4 -

கேரளா உடும்பன்சோலை கூக்லார் பகுதியைச் சேர்ந்தவர் சிம்புதுரை 34. இவரது 15 மற்றும் 13 வயது மகன்கள் போடி அரசு விடுதியில் தங்கி திருமலாபுரம் தனியார் மேல்நிலைப்பள்ளியில் 9, 7ம் வகுப்பு படித்தனர். சில நாட்களாக பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளனர். விடுதி வார்டன் செந்தில் கண்டித்து மாணவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். மகன்கள் இருவரையும் தந்தை கண்டித்துள்ளார். இதனால் மாணவர்கள் இருவரும் விடுதியை விட்டு வெளியே சென்றவர்கள் காணவில்லை. தந்தை சிம்புதுரை புகாரில் போடி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement