சீமை கருவேல் மரத்தை அகற்றிமிளகாய்க்கு ரூ.20,000 மானியம்

சிவகங்கை, ஜூலை 4-சீமைக்கருவேல் மரங்களை அகற்றி மிளகாய் சாகுபடி செய்ய எக்டேருக்கு ரூ.20 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என தோட்டக்கலை துணை இயக்குனர் சத்தியா தெரிவித்தார். அவர் கூறியதாவது: சீமைக்கருவேல் மரங்கள் நீர் மற்றும் மண் வளத்தை பாதிக்கும். பிற தாவரங்கள் வளர முடியாது. சீமைக்கருவேல் மரங்களை அகற்றி, அங்கு தோட்டக்கலை பயிர்களை நடவு செய்யப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் 300 எக்டேர் இலக்கு நிர்ணயித்து, சீமை கருவேல் மரங்களை அகற்ற எக்டேருக்கு ரூ.7,500 மானியம், அங்கு மிளகாய் சாகுபடி செய்ய எக்டேருக்கு ரூ.20 ஆயிரம் மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் கணினி சிட்டா, அடங்கல், ரேஷன் கார்டு, ஆதார் அட்டை நகல், நில வரைபடம், 3 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, மண், நீர் பரிசோதனைஅட்டை, வங்கி கணக்கு புத்தகத்துடன் https://tnhorticulture.tn.gov.in/tnhortnet என்ற இணைதளத்தில் பதிவு செய்து, அந்தந்த பகுதி தோட்டக்கலை உதவி இயக்குனரிடம் சமர்பித்து பெயரினை பதிவு செய்து கொள்ளலாம் என்றார். 

Advertisement