உதவி பேராசிரியர் பணி தேர்வு; குளறுபடிகளுக்கு அரசு விளக்கம்
சென்னை: உதவி பேராசிரியர் பணிக்கான போட்டித்தேர்வு குறித்த குற்றச்சாட்டுகளுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில், அரசு கலை அறிவியல் கல்லுாரி உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான போட்டி தேர்வில், முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. தேர்வு முடிவில், ஒரு தேர்வரின் பெயருக்கு பதிலாக, அதில் எண்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன.
மற்றொரு தேர்வரின் பிறந்த தேதி, 2006 என பதிவாகி உள்ளது. 2006ல் பிறந்தவர் எப்படி முதுநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்க முடியும் என, தேர்வர்கள் சந்தேகங்களை எழுப்பினர்.
இதுகுறித்து, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., அளித்துள்ள விளக்கம்:
உதவி பேராசிரியர் தேர்வு தொடர்பாக எழுந்துள்ள முரண்பாடு கள், விதிமீறல் குற்றச்சாட்டுகள், உண்மைக்கு புறம்பானவை. தனிப்பட்ட தேர்வர்களின் பிழைகளை அடிப்படையாக கொண்டு, முறைகேடு என்று சொல்வது ஆதாரமற்றது.
நியாயமான முறையில் தேர்வு நடத்தப்பட்டது. விதிகளின்படியே மதிப்பெண் வெளியிடப்பட்டது.
கணினி அறிவியல் பாடப்பிரிவு தேர்வு முடிவில், தேர்வர் ஒருவர், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் உள்ளவாறு, பிறந்த தேதியை குறிப்பிடுவதற்கு பதிலாக, டி.எம்ஆர்., கோடு எண் மற்றும் தேதி என பகுதியில் உள்ள தேதியை குறிப்பிட்டு, தவறாக பதிவேற்றம் செய்துள்ளார்.
அதேபோல, மற்றொரு தேர்வர், பெய ருக்கு பதிலாக, பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் எண்ணை இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
பின், அதில் திருத்தம் செய்ய, அவர் விண்ணப்பித்திருந்தார். அதன் அடிப்படையில், அவர் எழுத்து தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டார்.
சிறிய பிழையால், ஒரு தேர்வர் வாய்ப்பை இழக்காமல் இருக்கவே, இது மேற்கொள்ளப்பட்டது. அவர் விண்ணப்பித்த தரவுகள் அடிப்படையிலேயே, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த எழுத்து பிழைகள், மதிப்பீட்டில், மதிப்பெண்களில், தரவரிசையில், தேர்வு பட்டியல் தயாரிப்பில், இறுதித் தேர்வில் எந்த தாக்கத்தை யும் ஏற்படுத்தாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
மண்ணின் சுமை தாங்கும் திறன் அறிவதற்கான வழிமுறைகள்!
-
ஆன்லைன் முறையில் பட்டா பதிவிறக்கம் செய்வது எப்படி?
-
சட்டப்பூர்வ ஆய்வு இல்லாமல் சொத்து வாங்குவது நல்லதல்ல!
-
பாட்டி கொடுத்த சொத்தில் பேத்தியின் கணவர் உரிமை கோர முடியாது!
-
எந்த இடத்தில் என்ன வகை சிமென்டை பயன்படுத்த வேண்டும்?
-
நெடுஞ்சாலையை ஒட்டிய மனையை வாங்குவதால் என்ன பிரச்னை?