சென்னை - கோவை உட்பட 6 ரயில் சேவையில் மாற்றம்

சென்னை: ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக, ஆறு விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

ஒரு பகுதி ரத்து  சென்னை சென்ட்ரல் - கோவை இன்டர்சிட்டி, சென்ட்ரல் - கர்நாடக மாநிலம் கே.எஸ்.ஆர். பெங்களூரு லால்பாக் விரைவு ரயில்கள், வரும் 10, 12, 15, 17, 19, 22ம் தேதிகளில் காட்பாடியில் இருந்து இயக்கப்படும்

 கோவை - சென்ட்ரல் இன்டர்சிட்டி விரைவு ரயில், வரும் 10, 12, 15, 17, 19, 22ம் தேதிகளில் காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும்

 கர்நாடக மாநிலம் அசோகபுரம் - சென்ட்ரல் விரைவு ரயில், வரும் 10, 12, 15, 17, 19, 22ம் தேதிகளில் காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும்

 தாம்பரம் - நாகர்கோவில் அந்த்யோதயா விரைவு ரயில், வரும் 29ம் தேதி வாஞ்சி மணியாச்சி வரை மட்டுமே இயக்கப்படும். நாகர் கோவில் - தாம்பரம் அந்த்யோதயா விரைவு ரயில், வரும் 30ம் தேதி திருநெல்வேலியில் இருந்து இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சிறப்பு ரயில் சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு, சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

 திருநெல்வேலியில் இருந்து, வரும் 9, 16, 23, 30ம் தேதிகளில், இரவு 11:35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 10:45 மணிக்கு எழும்பூர் வந்தடையும்

 எழும்பூரில் இருந்து, வரும் 10, 17, 24, 31ம் தேதிகளில், மதியம் 1:25 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் அதிகாலை 1:00 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். இதற்கான முன்பதிவு இன்று காலை 8:00 மணிக்கு தொடங்கும்.

 கேரள மாநிலம், திருவனந்தபுரம் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில், தண்டவாள மேம்பாட்டு பணி காரணமாக, எழும்பூர் - கேரள மாநிலம் குருவாயூர் ரயில், வரும் 3 - 10ம் தேதி வரை 1:20 மணி நேரமும், வரும் 5, 7, 12, 14, ஆக., 4ம் தேதிகளில் 1:50 மணி நேரமும், 17, 19, 21, 24, 26, 28, 31, ஆக., 2ம் தேதிகளில் 2:15 மணி நேரமும் தாமதமாக செல்லும்.

Advertisement