லண்டனுக்கு குடும்பத்துடன் பயணம்; மனம் இங்கே தான் இருக்கும் என்கிறார் ஸ்டாலின்
சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் லண்டன் புறப்பட்டு சென்றார். சென்னை விமான நிலையத்தில் அவரை திமுகவினர் உற்சாகமாக வரவேற்றனர்.
லண்டனுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இன்று (ஜூலை 04) குடும்பத்துடன் புறப்பட்டு சென்றார். சென்னையில் இருந்து விமானம் மூலம் துபாய் செல்லும் ஸ்டாலின், அங்கிருந்து லண்டன் செல்கிறார்.
சென்னை விமான நிலையம் வந்த ஸ்டாலினுக்கு திமுகவினர் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். பேரன் இன்பநிதியின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
இதற்கிடையே கட்சியினருக்கு ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியதாவது: நான் வெளிநாடு சுற்றுப்பயணம் செல்கிறேன். இரு வாரங்கள் வெளிநாட்டில் இருந்தாலும் அறிவாலயத்தில் தான் என் மனம் இருக்கும்.
இன்று நாட்டில் நடக்கும் காட்சிகளை பாருங்கள், ஒரு சில கட்சிகளால் ஒரு தோல்வியைக்கூட தாக்குப்பிடிக்க முடியவில்லை. திமுகவை போல் அமைப்பு ரீதியான பலம் கொண்ட வேறு கட்சி இந்தியாவிலேயே கிடையாது. இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
சென்னை விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு குடும்பத்துடன் ஸ்டாலின் பயணம்; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
செந்தில் பாலாஜி வீட்டில் சம்மன் கொடுத்த உடனே... தலைவர் குடும்பம் முழுவதும் லண்டன் பயணம்.... இரண்டுக்கும் சம்பந்தம் இல்லை என்று நம்புவோம் !!!
பேங்க் பாலன்ஸ் 10000 தான் உள்ளது. டிக்கட் போக்குவரத்து தங்கும் செலவு செய்வது யார்?. படிக்கும் சம்பாதிக்காத ஆனால் பல கோடிகள் சொத்து உள்ள பேரன். இன்னும் இந்த குடும்பம் எத்தனை வருடம் எல்லாரையும் ஏமாற்றும்?
சொல்றது பேரனின் பட்டமளிப்பு விழா லண்டனில் அதற்காக செல்கின்றேன் என்று??? சில கேள்விகள்???
1 தமிழன் நான் தமிழ்நாட்டு முதல்வரக இருந்தவன் நான் என் அப்பா தமிழ்நாட்டு முதல்வராக இருந்தவர் என்று டாம் டாம் டாம் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும்திருட்டு முரடர்கள் கயவர்கள் கட்சி தலைவனே இந்தியாவில் படிக்க ஐஐடி என்று இல்லையா??? லண்டனுக்கு செல்லவேண்டுமா இந்த படிப்புக்கு???
2 அப்பா அம்மா தான் இந்த மாதிரி விழாவிற்கு செல்வது வழக்கம்???நீங்கள் செல்வதின் நோக்கம், தனது ஆட்சியில் இங்கு அமுக்கிய லஞ்சப்பணம் ரூ 3.2 லட்சம் கோடி அங்கு அனுப்பியது எந்த நிலையில் உள்ளது என்று பார்க்கத்தானே???
3 இஸ்ரேல் - முஸ்லீம் நாடுகளின் போரில் தனது சொத்து எவ்வளவு நாசம் ஆனது முஸ்லீம் நாடுகளில் என்று ஆய்ந்தறியத்தானே இந்த பயணம்
இப்படி இன்னும் பலப்பல உள்ளது
செந்தில் பாலாஜி - வெளிநாட்டுக்கு தப்பி ஓட திட்டமா? அதே தான் சுடலை மாயாண்டி ஜோசப் கான் செய்வது போல இருக்கின்றது
பாருங்கள் மக்களே திராவிட மாடல் பழைய முதல்வர் வெளிநாடு லண்டனுக்கு சென்றவுடன் இங்கே ஒரே அரசியல் கொந்தளிப்பு அவர் இங்கே இருக்கும்போது எதுவுமே இல்லை அவர் அங்கிருந்தே அதை அடக்கி விடுவார் அங்கே அவருக்கும் பட்டமளிப்பு விழாவாம் அதுக்காகத்தான் குடும்பத்தோடு சென்றிருக்கிறாராம் பிறகு ராணியை சந்தித்துவிட்டுதான் திரும்பிவருவாராம்
அப்படியே போய்டு.திரும்பி வராத. பீட ஒழிந்ததுன்னு சந்தோசமா இருப்போம்.
முதல்வர் தோரணையில், லண்டனுக்கு போகலாமுன்னு நினைத்திருப்பார். நினைப்பு பொழப்பை கெடுத்திருகிச்சு. எத்தனை குடும்பத்தை, கெடுத்திருக்கானுக எத்தனை பேரு வைத்திலே அடித்திருக்கானுக. தெய்வம் நின்று கொள்ளும் கொள்ளணும்.
மனம் இங்கே இருக்கும்..
பணம் அங்கே இருக்கும்..
என்னா நானு செப்புது.
லண்டனில் இருந்து வந்த உடன் ஜெயிலுக்கு போகும் நிலை வரும்
Manam engai annal panam angai