முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு; விசாரணையை முடிக்க ஐகோர்ட் கெடு

8


சென்னை: முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கை 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்க, மத்திய - மாநில அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டி.ஜி.பி., டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர் எஸ்.ஜார்ஜ் உள்ளிட்ட மத்திய - மாநில அரசு உயர் அதிகாரிகள் என, மொத்தம் 26 பேருக்கு எதிராக, சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கு, சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதற்கிடையே வழக்கில் தொடர்புடையவர்கள் தன்னை விடுவிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருக்கின்றனர். இந்த வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது, சி.விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கை 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

Advertisement