நீங்கள் வந்து ஆட்சியை காப்பாற்ற வேண்டிய நிலை இல்லை; திமுக மாஜிக்கு செங்கோட்டையன் பதிலடி

4


ஈரோடு: திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் வந்துதான் இந்த இயக்கத்தையோ, ஆட்சியையோ காப்பாற்ற வேண்டும் என்ற நிலை இல்லை என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பதிலடி கொடுத்துள்ளார்.

ஈரோட்டில் நிருபர்களிடம் செங்கோட்டையன் கூறியதாவது: அனிதா ராதாகிருஷ்ணனை போன்றவர்கள் வருகை தந்து தான் இந்த இயக்கத்தின் ஆட்சியை காப்பாற்ற வேண்டிய சூழல் இன்றைக்கு இல்லை. அவர் அவதூறாக பேசினார் என்பதற்காக ஐகோர்ட்டில் முன் ஜாமின் கேட்டு இருந்தார். அது வழங்கப்படவில்லை. அதற்கு பிறகு அவரை அழைத்து சென்று, வழக்குப்பதிவு செய்யப்பட்டார்.

அனிதா ராதாகிருஷ்ணன் முதலில் தனது பயணத்தை மேற்கொண்டது அதிமுகவில் தான். அங்கு எம்எல்ஏ, அமைச்சர் ஆக கூட ஆனார். அதற்கு பிறகு ஒரு சூழ்நிலை சந்தர்ப்பத்தில் இந்த இயக்கத்தில் இருந்து திமுகவில் இணைந்தார். அங்கேயும் அமைச்சர். அதனால் அவரது நிலைகளை பார்க்கும் போது சூழ்நிலை எப்படி இருக்கிறதோ அதற்கு ஏற்ப, மனநிலை மாறி கொண்டு இருக்கிறது. இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.


தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!

அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

முழு பேட்டியை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement