மேற்கு ஆசியாவில் பதற்றம் தணிந்தது; டில்லியில் அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரியும் உத்தரவு வாபஸ்

நமது டில்லி நிருபர்

மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் தணிந்த நிலையில், டில்லியில் அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரியும் உத்தரவு இன்று வாபஸ் பெறப்பட்டது.

மேற்கு ஆசிய மோதலால் ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, டில்லி அரசு ஊழியர்களுக்கு புதன் மற்றும் சனிக்கிழமைகளில் வீட்டிலிருந்து வேலை செய்யும் ஏற்பாடு வழங்கப்பட்டு இருந்தது.

தற்போது கிட்டத்தட்ட இயல்பு நிலைக்குத் திரும்பியதை அடுத்து புதன் மற்றும் சனிக்கிழமைகளில் அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரியும் உத்தரவை டில்லி அரசு திரும்பப் பெற்றுள்ளதாக முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதற்கு முதல்வர் ரேகா குப்தா ஒப்புதல் அளித்துள்ளார்.

டில்லி அரசின் அலுவலக நேரம் காலை 10 மணி முதல் மாலை 6:30 மணி வரை என மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும், அதே சமயம் டில்லி மாநகராட்சி ஊழியர்களுக்கான பணி நேரம் காலை 8:30 மணி முதல் மாலை 5 மணி வரையிலான தற்போதைய நடைமுறைகளே தொடரும் என முதல்வர் அலுவலகம் தெரிவித்தது.

Advertisement