தவெக ஆட்சியை கவிழ்க்க முயன்ற வழக்கு; முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சம்மன்
சென்னை: தவெக ஆட்சியை சதி செய்து கவிழ்க்க முயன்ற வழக்கில், விசாரணைக்கு ஜூலை 6ம் தேதி ஆஜராக கோரி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரருக்கு சென்னை போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு, 45. இவர், ஐ.பி.டி.எஸ்., என்ற கருத்துக்கணிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரும், திருச்சியைச் சேர்ந்த நரேஷ், 45, சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன், 40 ஆகியோரும், த.வெ.க., - எம்.எல்.ஏ.,க்களை இழுக்க பேரம் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
இது தொடர்பாக, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தொகுதி த.வெ.க., - எம்.எல்.ஏ., இளையராஜா அளித்த புகாரின்படி, சென்னை திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்து, திருநாவுக்கரசு உள்ளிட்ட எட்டு பேரை கைது செய்துள்ளனர்.
தொடர் விசாரணையில், த.வெ.க., ஆட்சி கவிழ்ப்பு பின்னணியில், கோவை தெற்கு தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ.,வும், அக்கட்சியின் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி மற்றும் அவரின் சகோதரர் அசோக்குமார் ஆகியோர் இருப்பது தெரிய வந்துள்ளது. த.வெ.க., ஆட்சியை கவிழ்க்க, 180 கோடி ரூபாய்க்கு பேரம் பேசப்பட்ட தகவல், போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராக கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமாருக்கு வரும் ஜூலை 6ம் தேதி விசாரணைக்கு திருவல்லிக்கேணி போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராக கோரி சம்மன் கொடுத்தனர். இந்த சம்மனை இன்று செந்தில் பாலாஜி வீட்டில் அவரது தந்தை வேலுச்சாமி இன்று வழங்கி இருக்கின்றனர்
@block_P@
தவெக எம்எல்ஏக்களை பேரம் பேசி விலைக்கு வாங்க முயற்சித்த வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமாருக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. குற்ற வழக்கில் தேடப்படும் நபர், சொந்த நாட்டைவிட்டு வேறு நாடுகளுக்கு தப்பித்து செல்வதை தடுத்து நிறுத்த வழங்குவது தான் லுக் அவுட் நோட்டீஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
block_P
சிறப்பு வீடியோ!
ஆட்சி கவிழ்ப்பு சதி வழக்கில் செந்தில்பாலாஜிக்கு சிக்கல்; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
திமுக விஜயை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபடுவது போல விஜயும் தன் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள சில வேலைகளை செய்து வருகிறார்.விஜயிடம் ஆட் என்பதால் அனுகூலம் அதிகம்.
இப்படித்தான் வாழ வேண்டும் என்பதில்லை எப்படியும் வாழலாம் என்பதே திராவிட கட்சியின் சித்தாந்தம். எனவே அந்த வழியில் வந்தவர்கள், எப்படியும் வாழலாம் என்று நினைப்பது இயல்புதான்.
நல்லது. அதே சமயம் சில அதிமுக MLAக்கள் ....
இப்போது எந்த மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லை என்று படுத்துக்கொள்ள போகிறார் என்றே தெரியவில்லை. ஒருவர் சிங்கப்பூரில் உடனே சரி என்று மருத்துவமனையில் படுத்து கொண்டுள்ளார் என்று செய்திகள் வருகின்றன. திமுகவில் இன்னும் எத்தனை பேர் மருத்துவமனையில் படுத்துக்கொள்ள போகிறார்களோ தெரியவில்லை.
செந்தில் பாலாஜிக்கு இந்த பிறவி எடுத்ததின் நோக்கமே, கமிஷன், ஊழல், ரௌடிசம், ஆட்சிக்கவிழ்ப்புக்கு திட்டம் தீட்டுதல் தான் போலிருக்கிறது. இதுக்கு எதுக்கு வெள்ளையும் சொள்ளையுமா அலையனும்?
எல்லா பிராட் பித்தலாட்டங்களுக்கும் அணுகவும் செந்தில் பாலாஜி/அசோக், கரூர். எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது.
நரசிம்மனுக்கு இவ்ளோ குசும்பு கூடாதுங்குறது அடியேன் தாழ்மையான அபிப்பிராயம்.
மைனாரிட்டி கட்சியின் மாநில ஆட்சியைக் கவிழ்க்க முயல்வது எந்த சட்டப் பிரிவின் படி குற்றம்? கூட்டணியிலேயே இருக்கும் காங்கிரசும் பல மாநில ஆட்சிகளை கட்சித்தாவல்கள் மூலம் கவிழ்ந்துள்ளதே. முதன்முதலாக 1957 ல் கேரள கம்யூனிஸ்டு மெஜாரிட்டி ஆட்சியை டிஸ்மிஸ் செய்து முன்னுதாரணத்தை உருவாக்கிய பெருமை காங்கிரசையே சாரும்.
அந்த மனுஷனுக்கு சம்மன் அனுப்பி அமைதியா விசாரிங்க
ஒரு பிரச்சனையும் வராது.
ஆனால் நீங்க அவரை கொஞ்சம் மிரட்டி பாப்போம்னு நெனச்சு மிரட்டுனீங்க அப்றம் பயத்துல வழக்கம் போல பேண்ட்ல உச்சா போயிருவாரு. அவரை சொல்லி குத்தமில்லை
ஏன்னா அவரு கொஞ்சம் பயந்த சுபாவம்.
ஆமா தளிக்கோட்டை பாலு தான் அந்த கண்ணறாவியை மேடையில பேசி விளம்பரப்படுத்துனாரு. செ பா வின் விளம்பரதாரர் அவுரு தான்.
ஒன்னும் நடக்காது அனிதா ராதாகிருஷ்ணனுக்கு பெ யில் கொடுத்துட்டாங்க ஏவா வேலு சவுகரியமாக சிங்கப்பூரில் நட்சத்திர மருத்துவமனையில் ரெஸ்ட் எடுத்துக் கொண்டுள்ளார் சிகிச்சை என்ற பெயரில் அவருக்கும் ஜாமின் வழங்கப்படும் அடுத்தது செந்தில் பாலாஜி என் சகோதரர் ஏற்கனவே முன் ஜாமின் கேட்டுள்ளார் அவருக்கும் வழங்கப்படும் அடுத்தது செந்தில் பாலாஜி முன் ஜாமீனுக்கு கேட்பார் அவருக்கு வழங்கப்படும் இல்லாவிட்டால் கைது செய்த பிறகு இரண்டு பேருக்கும் பெயில் வழங்கப்படும். பொல்லாத கூட்டம் தீய சக்திகளின் அடாவடி இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பது பெரிய ஏமாற்றம் தமிழக மக்களுக்கு.
எவ்வளவு கேவலமான பிள்ளைகள்