இதே நாளில் அன்று

ஜூலை 4:

ஆந்திர மாநிலம், கோதாவரி மாவட்டம், கோவூரில் பிரபல பாடலாசிரியரும், திரைக்கதை எழுத்தாளருமான கோடூரி சிவசக்தி தத்தாவின் மகனாக, 1961ல் இதே நாளில் பிறந்தவர் மரகதமணி எனும் எம்.எம்.கீரவாணி.

தெலுங்கு திரைப்பட இசையமைப்பாளர் கே.சக்ரவர்த்தி மற்றும் மலையாள இசையமைப்பாளர் சி.ராஜாமணி ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றிய இவர், மனசு மமதா என்ற தெலுங்கு படத்தில் இசையமைப்பாளர் ஆனார்.

தமிழில், இயக்குநர் கே.பாலசந்தரின் அழகன் படத்தில், மரகதமணி என்ற பெயரில் அறிமுகம் ஆனார்.

பிரபல தெலுங்கு சினிமா இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் உறவினரான இவர், அவரின் பாகுபலி உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தார். ஆர்.ஆர்.ஆர்., திரைப்படத்தில் இடம்பெற்ற, 'நாட்டு நாட்டு' பாடலுக்காக, 2023ல் ஆஸ்கர் விருதை பெற்றார்.

'கோல்டன் குளோப், பத்மஸ்ரீ' உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ள இவருக்கு, இன்று 65வது பிறந்த நாள்!

Advertisement