போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கை; கோவையில் போலீஸ் அதிரடி சோதனை

1

கோவை: போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதிகள், பிற மாநிலத்தவர் தங்கியுள்ள வீடு, விடுதிகளில் 400க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்தினர்.

கோவை மாவட்டத்தில் போதைப்பொருள் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத சமுதாயம், குற்றங்கள் இல்லா கோவை" என்ற இலக்கை முன்னிறுத்தி, மாவட்ட எஸ்பி பவன் குமாரின் நேரடி மேற்பார்வையில் பல்வேறு தீவிர தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதிகள், பிற மாநில மற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்தோர் தங்கியுள்ள பகுதிகள் உள்ளிட்ட இடங்களில், போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத செயல்களைத் தடுக்கும் நோக்கில் இன்று 400க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்தினர்.

Advertisement