தாத்தா, பேத்தி துாக்கிட்டு தற்கொலை

சென்னை: சென்னை தி.நகர் காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 50 வயது ஆட்டோ ஓட்டுநர், திருமணமாகாமல் தனியாக வசித்து வந்தார்.

உறவுமுறையில் பேத்தியான 17 வயது கல்லுாரி மாணவி, ராணிபேட்டை மாவட்டத்தில் இருந்து நேற்று முன்தினம், ஆட்டோ ஓட்டுநர் வீட்டிற்கு வந்துள்ளார்.

வீட்டு கதவு நீண்ட நேரமாக பூட்டியே இருந்துள்ளது. உறவினர் ஒருவர் வந்து, கதவை உடைத்து உள்ளே சென்றபோது, ஆட்டோ ஓட்டுநரும், மாணவியும் துாக்கில் தொங்கி இறந்தது தெரிந்தது.

கூரையின் இரும்பு குழாயில் ஒரே நயிலான் கயிற்றின் இரு முனைகளில் இருவரும் துாக்கிட்டு தொங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாண்டிபஜார் போலீசார், தற்கொலை குறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement