கருவடிக்குப்பம் காசி விஸ்வநாதர் கோவிலில் 7ம் தேதி சிறப்பு பூஜை

புதுச்சேரி: கருவடிக்குப்பம் காசி விஸ்வநாதர் கோவிலில் முதலாம் ஆண்டு பெருவிழாவையொட்டி, வரும் 7ம் சுவாமிக்குபாலபிேஷகம் மற்றும் சிறப்பு பூஜை நடக்கிறது.

கருவடிக்குப்பம் சுடுகாட்டில் அமைந்துள்ள சந்திரமதி தாயார் உடனுறை அரிச்சந்திர சுவாமி, காசி விசாலாட்சி, காசி விஸ்வநாதர் கோவிலில் முதலாம் ஆண்டு பெருவிழா வரும் 7 ம் தேதி நடக்கிறது.

இதற்கான விழா நாளை 6ம் தேதி காலை 7:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி, கணபதி ஹோமம், மயான ருத்திர ஹோமம், 10:00 மணிக்கு கலசாபிேஷகம் நடக்கிறது. நாளை மறுநாள் 7ம் தேதி காலை 8:00 மணிக்கு கருவடிக்குப்பம் சுந்தர விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம் ஊர்வலம் எடுத்து வந்து, சுவாமிக்கு பாலபிேஷகம் நடக்கிறது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் சுவாமிக்கு மகா தீபாராதனை நடக்கிறது.

Advertisement