சர்வதேச டேபிள் டென்னிஸ் இந்திய அணி வெண்கலம்
சென்னை: தாய்லாந்தில் நடந்த ஆசிய டேபிள் டென்னிஸ் போட்டியில், இந்திய அணியின் அபினந்த், மும்பையைச் சேர்ந்த திவ்யான்சி ஜோடி, வெண்கல பதக்கம் வென்றது.
உலக டேபிள் டென்னிஸ் சங்கம் ஆதரவுடன், தாய்லாந்து டேபிள் டென்னிஸ் சங்கத்தின் 30-வது ஆசிய யூத் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி, தாய்லாந்தின் பாங்காக்கில் நடந்தது. இதில், ஆசியாவைச் சேர்ந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர் - வீராங்கனையர் போட்டியிட்டனர். இந்தியா சார்பில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில், ஐந்துக்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கனையர் போட்டியிடுகின்றனர்.
இதன் ஒற்றையர் பிரிவு போட்டிகள் நிறைவடைந்த நிலையில், 19 வயதுக்கு உட்பட்ட கலப்பு இரட்டையர் பிரிவு போட்டி நேற்று நடந்தது. இதில், இந்தியா சார்பில் சென்னையைச் சேர்ந்த அபினந்த் , 18, மும்பையைச் சேர்ந்த திவ்யான்சி, 16, போட்டியிட்டனர்.
இந்த ஜோடி, காலிறுதி போட்டியில், சீனாவை 3 - 0 என்ற கணக்கில் வென்று, அரையிறுதி போட்டியில் தாய்லாந்து அணியை எதிர்கொண்டது.
இந்திய அணி, தாய்லாந்து அணியிடம் 0 - 3 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தது.
இதனால், மூன்றாம் இடம் பிடித்து, வெண்கல பதக்கம் கைப்பற்றியது.
அபினந்த்
திவ்யான்சி