பைக் ரேஸ் அடாவடி 8 வாலிபர்கள் கைது
சென்னை: பைக் சாகசத்தில் ஈடுபட்ட எட்டு பேரை கைது செய்த போலீசார், எட்டு பைக்குகளை பறிமுதல் செய்தனர்.
வண்ணாரப்பேட்டை, ராயபுரம், எண்ணுார் போன்ற பகுதிகளில், அடிக்கடி பைக் சாகசம் நடப்பதாக, போலீ சாருக்கு புகார் வந்தது.
இதையடுத்து, அப்பகுதி களில் 'சிசிடிவி' கேமரா மற்றும் பைக் சாகசம் செய்து சமூக வலைதளமான 'இன்ஸ்டா'வில் பதிவேற்றிய வீடியோ காட்சிகளை, போலீசார் ஆய்வு செய்தனர்.
இதில், வாகன ஓட்டிகள் அச்சுறுத்தும் வகையில், அதிவேகத்துடன் பைக்குகளில் சீறிப்பாய்ந்த தண்டையார்பேட்டையைச் சேர்ந்த முகில்வாணன், 23, கார்த்திக், 23, கவியரசன், 20, விஷ்வா, 20, தனுஷ், 22, சருண், 21, மோசை எபினேசன், 20, மகேஷ், 20, ஆகிய எட்டு பேரை, வண்ணாரப்பேட்டை போக்குவரத்து போலீசார், நேற்று கைது செய்தனர்.
விசாரணையில், நண்பர்களான அவர்கள், தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவதும், 'இன்ஸ்டா ரீல்ஸ்' மோகத்தால், சாகசங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
அவர்களிடமிருந்து, 'கே.டி.எம்., டியூக், யமஹா ஆர்15' என, விலை உயர்ந்த எட்டு பைக்குகளை, போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும்
-
சொல்கிறார்கள் –––––––––––––– ‘பெண்களின் முன்னேற்றத்திற்கு புதிய பாதை!’ ––––––––––––––
-
இத்தாலி பிரதமர் மெலோனியை மீண்டும் வம்புக்கு இழுத்த அதிபர் டிரம்ப்
-
தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர்; சியாமா பிரசாத் முகர்ஜிக்கு பிரதமர் மோடி புகழாரம்
-
வார தொடக்க நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 சரிவு
-
தவெக கூட்டணி அமைந்தால் விசிக இடம்பெறும்; திருமா அறிவிப்பு
-
கனமழையால் இதுவரை 10 பேர் உயிரிழப்பு: மும்பைக்கு ரெட் அலர்ட் விடுத்தது வானிலை மையம்