தொழிலதிபர் வீட்டில் 120 சவரன் நகை கொள்ளை

மதுரை: டிராவல்ஸ் உரிமையாளர் வீட்டில், 120 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றவர்களை, போலீசார் தேடுகின்றனர்.

மதுரை மாவட்டம், ஊமச்சிகுளம் அருகே, மந்திக்குளத்தைச் சேர்ந்தவர் கோசிமின். இவர் டிராவல்ஸ் நடத்தி வருகிறார்.

இவரது மனைவி காயத்ரி, கே.கே.நகர் உட்பட, மூன்று இடங்களில் 'ஸ்கின் கேர்' சென்டர் நடத்துகிறார்.

நேற்று, வீட்டின் பீரோவில் வைத்திருந்த நகைகள், பணத்தை கோசிமின் சரிபார்த்தபோது, அதிலிருந்து, 120 சவரன் நகை, 2 லட்சம் ரூபாய் கொள்ளை போயிருந்தது தெரிந்தது.

புகாரில் போலீசார், மர்ம நபர்களை தேடுகின்றனர்.

Advertisement