முப்பெரும் விழாவில் நலத்திட்ட உதவி
உடுமலை: அமராவதிநகர் உண்டு, உறைவிட பள்ளியில் நடந்த முப்பெரும் விழாவில், மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
உடுமலை அமராவதி நகர் உண்டு, உறைவிட பள்ளியில், திவான்பகதூர் ராஜா 143-வது பிறந்த நாள் விழா, சர்வதேச யோகா தின விழா மற்றும் மாணவர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழாவாக நடந்தது.
விழாவில், திவான் பகதுார் எம்.சி., ராஜா அறக்கட்டளையின் நிறுவனர் பூரண்குமார் ராஜா தலைமை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் அமராவதி நகர் சைனிக் பள்ளியைச் சேர்ந்த ஆறு மாணவர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று, பழங்குடியினர் பள்ளி மாணவர்களிடையே சேவை மனப்பான்மையின் முக்கியத்துவம் குறித்து பேசினர்.
தொடர்ந்து, திவான் பகதுார் ராஜா அறக்கட்டளை சார்பில், பழங்குடியினர் பள்ளி மாணவர்களின் கல்வி மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இவ்விழாவில் அறக்கட்டளை இயக்குனர் வினித்ரா, தலைவர் பத்மா, துணைத்தலைவர் சங்கமித்ரா மற்றும் செயலாளர் கரண்ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
எங்கள் நாட்டு மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்; இந்தியாவுக்கு வெனிசுலா அதிபர் நன்றி
-
மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
-
காட்டெருமை தாக்கியதில் நேபாள தொழிலாளி காயம்
-
கஞ்சா வைத்திருந்த இருவர் கைது
-
பிச்சாவரம் படகு குழாமில் பிரியாணி விற்பனை துவக்கம்
-
கத்தார் பிரதமருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு; மேற்காசிய போர் குறித்து முக்கிய ஆலோசனை