'பெண்களின் முன்னேற்றத்திற்கு புதிய பாதை!'
சி.கே., கல்வி குழும நிறுவன தலைவர், 'இந்தியன் உமன் நெட்வொர்க்' எனப்படும் இந்திய மகளிர் வலையமைப்பின் தமிழக தலைவர், 'கவின்கேர் இ - காமர்ஸ்' என்ற வர்த்தக நிறுவனத்தின் இயக்குநர் என, பல்வேறு துறைகளில் பம்பரமாக சுழன்று வரும், சென்னையை சேர்ந்த, 38 வயதாகும் அமுதவல்லி ரங்கநாதன்:
நான், 'கவின்கேர்' குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பதற்காக, படிப்பு முடித்த உடனே பெரிய பதவி கொடுக்கப்படவில்லை. ஆரம்பத்தில் ஒரு பணியாளராக தான் பயணத்தை துவங்கினேன். அதில் குறிப்பிட்ட இடத்தை அடைய, 10 ஆண்டுகள் கடினமாக உழைத்தேன்.
என் முதல் வேலை விற்பனை பிரிவில் தான். 'குட்டி யானை' எனப்படும் சிறிய சரக்கு வாகனத்தில், விற்பனை பணியாளர்களுடன் ஊர் ஊராக பொருட்களை அனுப்புவது, வினியோகம் செய்வது என சென்றேன். அதிகாலை 2:30 மணிக்கே எழுந்து அலுவலகம் சென்றால், இரவு 9:00 மணிக்கு தான் வீட்டிற்கு திரும்புவேன். இப்போது இருப்பது போல கணினி வசதிகள் இல்லாத காலம் அது. சில நேரங்களில் கடும் சோர்வால், சாப்பிடாமல் கூட துாங்கி இருக்கிறேன்.
சிறு வயது முதலே எனக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும். குழந்தைகளை பார்த்தாலே பதற்றம், மன அழுத்தம் குறைந்து மனம் அமைதியாகி விடும். இந்த எண்ணம் தான், மழலையர் பள்ளியை துவங்க துாண்டுகோலாக இருந்தது.
கடந்த 2013ம் ஆண்டு சென்னை மற்றும் கடலுாரில் சிறு குழந்தைகளுக்கான பள்ளிகளை துவக்கினோம். கொரோனா ஊரடங்கில், உள்ளூர் கேபிள் சேனல் வாயிலாக, அனைத்து குழந்தைகளுக்கும் பாடங்கள் கற்று கொடுத்தோம். 'கணினி மூலம் கல்வி வசதி கிடைக்காத குழந்தைகளுக்கு அது மிகவும் பயனுள்ளதாக இருந்தது' என பலரும் பாராட்டினர்.
எங்கள் கல்வி நிறுவனங்களில் ஆங்கில பயிற்சி கட்டாயம். இசை முதல் விளையாட்டு வரை ஏதாவது ஒன்றை கற்றுக்கொள்ள வேண்டும். கிராமப்புற பெண்கள் மிகவும் திறமையானவர்கள். ஆனால், அவர்களுக்கு போதிய வாய்ப்பு கிடைப்பதில்லை. அதற்கு அடித்தளமாகத்தான், 'இந்திய மகளிர் வலையமைப்பு' செயல்படுகிறது. சென்னை, மதுரை, திருச்சி, சேலம், கரூர், கோவை, ஈரோடு என ஏழு இடங்களில் இந்த அமைப்பு செயல்படுகிறது.
ஒரு பெண்ணை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல தேவையான பல விஷயங்களை இந்த அமைப்பு வழங்குகிறது. பல பிரச்னைகளுக்கும் இந்த அமைப்பின் வாயிலாக தீர்வு காண முடியும். பொருட்களை விற்பனை செய்வது முதல் செயற்கை நுண்ண்றிவு தொழில்நுட்பம் வரை அனைத்து பயிற்சிகளும் இங்கு வழங்கப்படுகின்றன. எல்லா பெண்களும் எங்கள் அமைப்பில் இணையலாம்; அதற்கான கட்டணமும் மிகவும் குறைவு!
***
மேலும்
-
சோழபுரத்தில் 13ஆம் நுாற்றாண்டுஆசிரியம் கல்வெட்டு கண்டெடுப்பு
-
பரமக்குடி புகையும் குப்பைக் கிடங்கு ராம்நகர் மக்கள் முற்றுகை போராட்டம்
-
குறுவட்ட விளையாட்டு போட்டிகள் துவக்கம்
-
தேசிய மின்னணு இயக்கத்தில் கால்நடைகளுக்கு அடையாள எண்
-
ஆவின் பால் பண்ணை வளாகத்தில் தீ விபத்து
-
ஓரிவயலில் குடிநீர் வசதியின்றி 500 குடும்பங்கள் தவிப்பு