தேசிய மின்னணு இயக்கத்தில் கால்நடைகளுக்கு அடையாள எண்

கம்பம்:கால்நடைகளின் எண்ணிக்கையை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தின் கீழ் தேசிய மின்னணு கால்நடை இயக்கம் துவங்கப்பட்டுள்ளது. தற்போது தடுப்பூசி போடுவதுடன், கால்நடைகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு டிஜிட்டல் மயமாகிறது.

ஆண்டிற்கு இருமுறை பசு மற்றும் எருமை மாடுகளுக்கு காணை நோய் தடுப்பூசி போடுவதை கால்நடை பராமரிப்பு துறை மேற்கொண்டு வருகிறது. மாடுகளின் வாய், கால்களில் ஏற்படும் இந்நோயை தவிர்க்க இந்த தடுப்பூசி அவசியமாகிறது.

கடந்த வாரம் காணை நோய் தடுப்பூசி போடும் பணி துவங்கியது. இப் பணியுடன், கால்நடைகளின் காதுகளில் டேக் அடித்து அதற்கு ஒரு எண் வழங்குகின்றனர். பின்னர் பசு அல்லது எருமை, அதன் வயது, ஈன்ற கன்றுகள், உரிமையாளர் பெயர், அவரது முகவரி, ஆதார் எண் போன்ற விபரங்களை சம்பந்தப்பட்ட போர்ட்டலில் பதிவேற்றம் செய்வார்கள். உரிமையாளர் அலைபேசி எண்ணிற்கு ஒடிபி வரும். அந்த எண்ணை பதிவு செய்தால், தேசிய மின்னணு கால்நடை இயக்கத்தில் பதிவாகி விடும். பின் அந்த எண்ணை தட்டினால் அந்த பசு, எருமை உரிமையாளர் பற்றிய விபரங்களை எளிதாக தெரிந்து கொள்ளலாம். தடுப்பூசி பணியுடன் டிஜிட்டல் மயமாக்கும் பணியும் விறுவிறுப்பாக நடந்து வருவதாக கால்நடை பராமரிப்பு துறை தெரிவித்துள்ளது.

Advertisement